
jalanarayanan temple in nepal (1)
தண்ணீரில் மிதக்கும் நாராயணன் -எங்கே தெரியுமா?
Narayana floating in water – do you know where?
பெருமாள் பல கோவில்களில் நின்ற கோலத்தில், சயனக் கோலத்தில் மற்றும் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். இது தான் பொதுவானது. ஆனால், நேபாளத்தில் காத்மாண்டு பள்ளத்தாக்கத்தில் சிவபுரி மலையடிவாரத்தில் ஜலநாராயணாக அருள்புரிகிறார்.
ஜலத்தில் இந்த நாராயணன் இருப்பதற்கு பின்னாடி உள்ள வரலாறு தெரியுமா?? பல ஆண்டுகளுக்கு முன் விவசாயி ஒருவர் தன் நிலத்தை உழுதுக் கொண்டிருக்கும் போது ஏதோ நிலத்தில் தட்டுப்பட்டது.அதையும் தாண்டி அந்த விவசாயி நிலத்தை உழுதார். அப்போது நிலத்திலிருந்து இரத்தம் பீறிட்டது. அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயி நிலத்தை உழுவதை நிறுத்தி விட்டு அந்த இடத்தில் தோண்ட ஆரம்பித்தார். அப்போது அங்கு இருந்து நாராயணன் சிலையை எடுத்தார்.பின்பு அந்த இடத்தில் விஷ்ணு குப்த மன்னர் நாராயணனுக்கு கோவில் காட்டினார். அந்த கோவில் சுமார் 1400 வருடங்களுக்கு முற்பட்டது.
இந்த நாராயணர் சிலையின் ஒரு பகுதியை எடுத்து ஆய்வாளர்கள் பலர் ஆய்வு செய்தார்களாம். ஒரு சிலர் இந்த சிலை சிலிக்கா கல்லால் ஆனது என்றும், ஒரு சிலர் லாவா கற்களால் ஆனது என்றும் கூறி வந்தனர். ஆனால், இறுதியில் ஒரு ஆய்வின் முடிவில் இந்த இரண்டுமே இல்லை என்று ஒரு சிலர் கூறினர். இங்கே 13 அடி அகலமும், 5 அடி உயரமும் கொண்ட குளத்தில் தான் இந்த ஆதிசேஷன் மிதக்கிறார். ஜலநாராயணன் கைகளில் சங்கு, சக்கரம், கதை மற்றும் மாணிக்கங்களை தாங்கி உள்ளார். கால் அடியில் தாமரை மலர் உள்ளது. இங்கே ஜல நாராயணனுக்கு கூரை கிடையாது. ஜலநாராயணன் கோவிலில் கமலா ருத்ராட்சம் மரம் உள்ளது. இந்த கமலா ருத்ராட்சம் இங்கே மட்டும் தான் உள்ளது. வேற எங்கயும் நம்மால் பார்க்க முடியாது. இங்கு வருடத்திற்கு ஒரு முறை கார்த்திகை மாதம் திருவிழா நடக்கும். ஹரி போதினி, ஹரி சயனி என்ற பெயரில் திருவிழா நடக்கும். அதாவது, விஷ்ணு பகவான் தூக்கத்திற்கு செல்லுதல் மற்றும் தூக்கத்திலிருந்து எழுதல் போன்றவை குறிப்பது.