இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு படம் எப்படி இருக்கு??

wait loading cinibook video

விமல் நடிப்பில் ஏ.ஆர்.முகேஷ் இயக்கத்தில் இன்று வெளியான படம் தான் இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு… படம் எப்படி இருக்கு? இளைஞர் வட்டத்தை குதூகலப்படுத்தியுள்ளதா?? இல்லையா?? என்று பார்ப்போம்…???

இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு படம் எப்படி இருக்கு??

கதைக்கரு:-

படத்தில் ஒரே மாதிரியான handbag நாலு பேர் கிட்ட இருக்கு. நான்கிலும் ஒவ்வொரு பொருள்கள் உள்ளது. இந்த நான்குமே அந்த நான்கு பேர்களுக்கிடையே கைமாறிகிறது. இறுதியில் அவர் அவர் handbag சரியாக அந்த நாலு பேருக்கும் வந்து சேர்கிறது என்பது தான் கதை. இதை தான் முகேஷ் அவர்கள் செஸ் காமெடி- உடன் இளவட்டத்தை கவரும் வகையில் சொல்ல முயற்சித்துள்ளார் என்று சொல்லலாம்.

திரைவிமர்சனம்:-

படத்தில் கதைனு பார்த்த சொல்ற அளவுக்கு இல்லை என்பது தான் உண்மை. ஒரு சின்ன கான்செப்ட் தான் அதை தான் இயக்குனர் முகேஷ் அவர்கள் செஸ் காமெடியாக சொல்லி உள்ளார். படத்தின் தலைப்பு மற்றும் ட்ரைலர் வச்சு அனைவரும் இந்த படம் அந்த மாதிரி படம் போல என்று நினைப்பார்கள். ஆனால், படத்தை பார்த்த பின்பு தான் தெரிந்தது படத்தில் எந்த காட்சியும் ரொம்ப கொச்சையாக இல்லை என்பது தான். ஆனால், கொச்சைப்படுத்தும் வகையில் காமெடி தான் முகம் சுளிக்க வைக்கிறது. குடும்பத்துடன் பார்க்க ஏற்ற படமே இல்லை…..

படம் முழுக்க இளவட்டத்தை ஈர்க்கும் வகையில் செஸ் காமெடி கலந்துள்ளது. காமெடி என்பது சிந்திப்பதற்கு இல்லையே??? ஒரு பொழுதுபோக்கு தானே… ஆனால், படத்தில் கதை இல்லாதது ஒரு குறை தான். மேலும் இந்த படம் இளவட்டத்தை ஈர்க்கும் வகையில் எடுத்தது போலவே தோணுது.

இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு படம் எப்படி இருக்கு??

படத்தில் பாடல் சுமார். BGM பார்த்த பழைய காலத்து படங்களில் வருவது போலவே இருந்தது.
படத்தில் கதை, லாஜிக் எதுவுமே இல்லாமல் இருப்பது கொஞ்சம் சலிப்படைய வைத்துள்ளது.
மொத்தத்தில் படம் இளசுகளுக்கு ஏற்ப ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை… கதை என்று எதிர்பார்த்து போனால் ஏமாற்றம் தான் மிஞ்சும். படம் உண்மையில் இளவட்டத்தை குதூகலபடுத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. பொழுதுபோக்கும் வகையில் இருக்கும் படம்.

Leave a comment

You may also like...