இரும்புத்திரை திரைவிமர்சனம், விஷால், சமந்தா, அர்ஜுன்

லைக்கா ப்ரொடெக்ஸ்ன் வழங்கும் இரும்புதிரை, விஷால், சமந்தா, அர்ஜுன், போன்ற முன்னணி நடிகர் நடிகைகள் நடித்த இந்த படம் தற்போது வெளிவந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது இந்த படத்தை நடிகர் விஷாலே தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Pre-Production

இந்த படத்தில் முதலில் ஆர்யாவிடம் வில்லனாக நடிக்க படக்குழு கேட்டுக்கொண்டது விஷால் தன் நெருங்கிய நண்பர் என்பதால் படத்தின் கதைகூட கேட்காமல் ஒத்துக்கொண்டார் ஆர்யா, அனால் படத்தின் வேலைகள் ஆரம்பித்த பிறகு அவர் வில்லனாக நடிக்க மாட்டேன் என்று விலகிவிட்டார். பிறகு படக்குழு ஆக்சன்கிங் அர்ஜுனை சந்தித்து ஒப்பந்தம் செய்தது. இதனால் படம் வெளிவர சிறிது தாமதம் ஆனது. மேலும் இந்தப்படத்தை அறிமுக இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்குகிறார்.

கதைக்களம்

தொழில்நுட்ப வளர்ச்சிஅன்றாட  நம் வாழ்வில் நிறைய நல்ல விஷயங்களையும், பல மாற்றங்களையும் கொண்டு வருகிறது  அதேவேளையில், அது எதிர்மறை பக்கமாகவும் உள்ளது. இந்த எதிர்மறை பக்கங்களை வெளிச்சம் போட்டு காட்டக்கூடிய ஓரு படம் தான் இந்த இரும்புத்திரை.  விஷால்  இது போன்ற ஒரு விஷயத்தை கையாளுகிறார். இந்த இணையத்தள பயன்பாடு அதிகரித்த தன் விளைவாக , சைபர் குற்றங்கள் மற்றும் குறிப்பாக பெருவாரியான ரகசிய தகவல்  திருட்டுகள் அதிகரித்து கொண்டிருக்கிறது.

மக்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் பதிவு செய்யப்பட்டு அவர்களின் வங்கிக் கணக்குகள் ஹேக் செய்யப்படுவதைப் பற்றி நாம் அடிக்கடி கேட்கிறோம். இரும்புத்திரை இதனை வெளிச்சம் போடு காண்பிக்க்கிறது மேலும் இந்த படம் நடைமுறையில் உள்ள தகவல்த்தொழில்நுட்ப வளர்ச்சியை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட ஒரு படமாக இருக்கிறது. அதேபோல் இந்த நாடு டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு தயாராக உள்ளதா என ஒரு பெரிய கேள்வியை எழுப்புகிறது.
திரைவிமர்சனம்

படத்தின் திரைக்கதை பொறுத்தவரை அங்கும் இங்கும் தாவுனாலும் கதையை சரியாக மக்களிடம் கொண்டுபோய் சேர்த்துள்ளானார் புதுமுக டைரக்டர் மித்ரன்.

துப்பறிவாளனுக்கு பிறகு விஷால் தனது அடுத்த படத்தை கொடுத்துள்ளார் மேலும் இந்தப்படத்தின் மூலம் விஷால் தன் ரசிகர்களின் மனதில் இடம்பிடிப்பார் எனபது நிச்சயம் படத்திற்கு தேவையான நடிப்பை கொடுத்துள்ளார்.

படத்தின் முதல் பகுதியில் ட்ரைலர்ல் பார்த்ததுபோல் சண்டை காட்சிகள் இடம் பெறவில்லை. அதேவேளையில் படத்த்தின் இரண்டாம் பகுதியில் நாம் அனைவரும் இருக்கையின் முன்னையில் அமரும் அளவிற்கு விறுவிறுப்பாக காட்சிகள் இடம்பெற்றுள்ளது. படத்தில் டெக்னாலஜி காட்சிகள் அதிகம் இடம்பெற்றிருப்பதனால் சாதாரண மனிதர்கள் இந்த படத்தை புரிந்துகொள்வதில் சற்று சிரமம் ஏற்படுகிறது.

சமந்தா இந்த படத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை அருமையாக செய்துள்ளார். யுவன் பின்னணி இசை இந்த படத்திற்கு சற்று பலம் தருகிறது அனால் பாடல்கள் ஒன்றும் சொல்லும் அளவிற்கு இல்லை.

இரும்புத்திரை மதிப்பெண்

இந்த படத்திற்கு சினிபூக் 5க்கு 2.6 கொடுக்கிறது.

You may also like...