கமல் ஜோடியாக காஜல் -இந்தியன்2 படத்தில்…!!!

wait loading cinibook video

இயக்குனர் சங்கரின் 2.0 படம் வெளியாகி நல்ல வசூலை பெற்று வருகிறது. இந்நிலையில், சங்கர் அடுத்த படத்திற்கு தயாராகி விட்டாராம். ஏற்கனேவே, அறிவித்திருந்ததைப் போல இந்தியன் படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்க தயாராகி வருகிறார் சங்கர். இந்தியன் படத்தில் கமல் இரண்டு வேடத்தில் நடித்திருப்பார். அதில் ஒன்றான வயதான கதாபாத்திரத்திற்காக சங்கர் அவர்கள் கமலுக்கு புதிய ஸ்டைலிலில் மேக்கப் செய்து பார்த்து அதற்கான டெஸ்ட் ஷூட் கூட எடுத்து பார்த்துள்ளனர். தற்போது, இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக காஜல்அகர்வால் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். அதன்படி, அவருக்கான மேக்கப் போடுவதற்கு பாரிஸ் தயார் செய்துள்ளனர். இரண்டு நாட்கள் வரை காஜல் அவர்களுக்கு மேக்கப் போட்டு பார்ப்பார்களாம்.

கமல் ஜோடியாக காஜல் -இந்தியன்2 படத்தில்...!!!

இயக்குனர் சங்கர் படம் என்றாலே அதில் அனைத்துமே பிரமாண்டமாக தான் இருக்கும். அவரின் படத்தில் மேக்கப், செட்டிங் மற்றும் இசை தூக்கலாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த வகையில் இந்தியன் 2 படத்தில் மேக்கப் சிறப்பாக இருக்கும் போல… மேக்கப் மட்டுமே பாரிஸ் செல்கிறார்கள் என்றால் பாருங்கள்….

Leave a comment

You may also like...