இந்திய, பாகிஸ்தான் போர் மீடியா, சமூகஊடகங்களினால் உருவாகும் அபாயம்

wait loading cinibook video

காஷமீரின் புல்வாமா பகுதியில் 300கிலோ எடைகொண்ட RDXஐ தற்கொலைப்படையை கொண்டு வெடிக்கச்செய்த சம்பவத்தையடுத்து. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடும் சண்டை நிலவிவருகின்றன.

இந்த நிலையில் எல்லைமீறி இந்திய நாட்டிற்குள் வந்த பாகிஸ்தான் போர் விமானத்தை விரட்டுகின்ற சமயத்தில் நமது போர்விமானம் பாகிஸ்தான் எல்லையில் மாட்டிக்கொண்டது இதில் இருந்த விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடையே மாட்டிக்கொண்டார். இப்படி ஒரு சமயத்தில் நமது வீரர் அவர்களிடம் மாட்டிக்கொண்டது பெரும் வருந்தத்தக்க விஷயமாக ஆகிவிட்டது.

இதனால் இந்தியாவால் சுதந்திரமாக முடிவெடுக்காத நிலையில் தள்ளப்பட்டுள்ளது மற்றும் இந்தியா மக்கள் அனைவரும் அவர் உயிருடன் இந்தியா வரவேண்டும் என்று பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

அபிநந்தனிடம் அந்நாட்டு ராணுவத்தளபதி கேள்வி கேட்டபோது அபிநந்தன் தனது ஊர், தான் செய்யும் வேலை மற்றும் பயணித்த விமானத்தின் பெயர் போன்ற ராணுவ ரகசியத்தை வெளியிட மறுத்துவிட்டார். ஆனால் இங்கே என்னவென்றால் அவரது வீடு, அப்பா, அம்மா அவரது குடும்பம் போன்ற அனைத்தையும் நமது இந்தியா மீடியா மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிட்டுவிட்டனர் இதனை இவர்கள் தெரிந்து செய்கிறார்களா இல்லை தெரியாமல் செய்கிறார்களா என்பது பெரிதும் கேள்விக்குறியாக இருக்கிறது. இந்த ரகசியங்கள் எதிரி நாட்டிடம் கிடைத்துவிட்டால் அதைவைத்து அவர்கள் மிரட்டும் அபாயம் அதிகம் உள்ளது. தயவுசெய்து மீடியாக்கள் மற்றும் சமூக ஊடகங்கள் இந்தவிஷயத்தில் அமைதிக்காதிருக்கும்படி கண்டிப்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Leave a comment