Imaikkaa Nodigal Movie Review, Vijay Sethupathy,Nayanthara,Atharvaa

2015 இல் வெளியான டிமாண்டி காலனி என்ற வெற்றி படத்தை கொடுத்த அஜய் ஞானமுத்துவின் இரண்டாவது படம் தான் “இமைக்கா நொடிகள்” . இந்த படத்தில் நயன்தாரா, அதர்வா,ராஷி கண்ணா மற்றும் அனுராக் காஷ்யப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். விஜய் சேதுபதி கௌரவ வேடத்தில் வருகிறார் .அனுராக் காஷ்யப் தமிழுக்கு புதிது. அவர் பாலிவூட்டில் சிறந்த இயக்குனர். முதல் முறையாக நடித்து உள்ளார் என்றால் யாரும் நம்ம முடியாது.

கதைக்களம்

படத்தின் ஆரம்பத்திலேயே பணத்திற்க்காக ஒரு கொலை நடக்கிறது. இந்த விஷயம் சிபிஐ அதிகாரியாக இருக்கும் நயன்தாராவுக்கு தெரிய வருகிறது. பின்பு , அந்த கொலையைப் பற்றி விசாரிக்கிறார். அனுராக் பெங்களூரை சேர்ந்த ஒரு பெண்ணை கடத்தி அந்த பொண்ணை வைத்து பணம் கேட்டு மிரட்டுகிறார். ஒரு கட்டத்தில் அனுராக் பணத்தையும் பெற்றுக் கொண்டு அந்த பெண்ணை கொடூரமாக கொலை செய்து அந்த பொண்ணு உடைய வீட்டுக்கு பொனமாக அனுப்பி வைக்கிறார். அது மட்டும் அல்லாமல், அடுத்து அடுத்து இது போல பல கொலைகள் நடக்கும் என்று நயன்தாராவை மிரட்டுகிறார். அனுராக் சொன்னது போலவே அடுத்து அடுத்து கொலையும் செய்கிறரார். இந்த கொலைகளை யார் செய்கிறார்? எதற்காக செய்கிறார் என்று நயன்தாரா ரொம்ப தீவிரமாக தேடும் வேளையில் , இறுதியாக நயன்தாராவின் நண்பரகா வரும் அதர்வா அவரின் காதலியானா ராஷி  கண்ணாவை கடத்தி விடுவார் அனுராக். மேலும், அவர் கடத்தி விட்டு அதர்வாவை சிபிஐ-யில் மாட்டி விடுவார். இதனால் நயன்தாரா மேலும் சிக்கலுக்கு ஆளாகிறார். அவர் இறுதியில் வில்லனான அனுராக்கை பிடித்தாரா? ராஷி கண்ணாவை உயிருடன் மீட்டாரா? ஆதரவாயும் போலீஸ்லிருந்து மீட்டாரா? என்பது தான் கிளைமேக்ஸ். …….

 

திரைவிமர்சனம்

நயன்தாரா சிபிஐ -வாக சிறப்பான முறையில் நடித்து உள்ளார். உண்மையில் லேடி சூப்பர் ஸ்டார் என்பதற்கு பொருத்தமாகவே இந்த படத்திலும் நடித்து உள்ளார். அனுராக் பாலிவூடில் சிறந்த இயக்குனர். அவர் தமிழுக்கு  இது தான் முதல் படம். சிறந்த இயக்குனராக மட்டும் அல்லாமல் நடிப்பில் வெளுத்து வாங்கி உள்ளார்.
அவர் நடிப்பில் தனக்கென தனி முத்திரை பதித்து உள்ளார் . .படத்தில் அனுராக் – நயன்தாரா இருவருமே
சிறந்த முறையில் அவர் அவர்கள் காதாபாத்திரத்திற்கு ஏற்றாற்போல ரொம்ப சிறப்பாக நடித்து உள்ளனர்.
மேலும், நயன்தாரா விஜய் சேதுபதி உடன் வரும் காதல் காட்சிகளில் ரசிக்கும் படி அழகா நடித்து உள்ளார். விஜய் சேது படத்தில் சில மணி நேரமே வந்தாலும், நச்சுனு நடித்து உள்ளார்.
படத்தில் அதர்வா-ராஷி கண்ணா அவர்களின் காதல் காட்சிகள் ரசிக்கும் படி இருந்தாலும், படத்திற்கு தேவையே இல்லாதது போல தெரிந்தது. அந்த காதல் காட்சிகளை தவிர்த்து இருந்தால் நல்லா இருந்திருக்கும்…என்று தோன்றுகிறது.
படத்தின் பின்னணி இசையில் மிரட்டி உள்ளார் ஹிப்ஹாப் ஆதி. அவரின்  இசை படத்திற்கு மேலும் பலம் சேர்த்ததுப் போல இருந்தது. 

 படத்தின் இரண்டாவது பாகம் பற்றி சொல்லியே ஆகணும். இரண்டாவது பாகத்தில் அடுத்து அடுத்து வரும் ட்விஸ்ட் பார்வர்களை அதிர வைக்கிறது. எப்பவும், எல்லா படத்தில் ட்விஸ்ட் வச்சாலே அடுத்து இது தான் வரும் என்று, நாம் யூகிக்கும் படி தான் இருக்கும்.ஆனால், இந்த படத்தில் நம்ம யூகிக்கும் படி எந்த ட்விஸ்டும் இருக்காது. பார்ப்பவர்கள் கண் இமைக்காமல் பார்க்கும் படி தான் இருக்கும், காட்சிகள். அதற்க்கு இயக்குனர் அஜய் அவர்களுக்கு மிக பெரிய பாராட்டுகள்……… மொத்தத்தில் “இமைக்கா நொடிகள்”  நம்மளை கண் கூட இமைக்கவிடமால் படத்தைப் பார்க்கும் படி தான் இருக்கும் என்பதில் உறுதி …. படம் ரொம்ப சூப்பரா வந்து இருக்கு …..படத்தை திரையரங்குகளில் பார்த்து மகிழுங்கள்…….

 

 

மதிப்பெண்

இமைக்கா நொடிகள் சினிபுக்கின் மதிப்பெண் 5க்கு 3

Movie cast & crew

Directed by R. Ajay Gnanamuthu
Produced by C. J. Jayakumar
Screenplay by Pattukkottai Prabakar
Story by R. Ajay Gnanamuthu
Starring Nayanthara
Atharvaa
Anurag Kashyap
Raashi Khanna
Music by Hiphop Tamizha
Cinematography R. D. Rajasekhar
Edited by Bhuvan Srinivasan
Production
company
Cameo Films India
Release date
30 August 2018
Running time
170 minutes
Country India
Language Tamil

You may also like...