குழந்தைக்களுக்கு இனி இதை கொடுங்கள்….உடல் வலிமை பெற……!!!!!

நாம் ஆரோக்கியமான வாழ்க்கையை தான் வாழ்ந்து வருகிறோமா என்று அனைவருமே தன்னை தானே கேட்டுக்கொண்டால். உங்களுக்கே விடை தெரியும். கண்டிப்பாக ஆரோக்கியமற்ற வாழ்கையை தான் வாழ்கிறோம். அதில் எந்த சந்தேகம் கிடையாது. அதுக்கு முதல் காரணமே நாம் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் உணவு வகைகள், உணவை சாப்பிடும் முறை என அனைத்தும் தான். இந்த நவீன உலகத்தில் நாம் அனைவரும் இயந்திர வாழ்கை தான் வாழ்ந்து வருகிறோம். இயந்திரத்தை சார்ந்து வேலைகள் தற்போது செய்கிறோம். இதை எல்லாம் தான் நம்முடைய உணவு வகைகள் அனைத்தும் மாற்றி விட்டோம். நம் முன்றோர்கள் சாப்பிட்ட உணவு இயற்கையானது. இப்போதே அனைத்துமே விஷமாக தான் உள்ளது. இதில் நாம் முன்றோர்கள் பயன்படுத்திய ஆரோக்கியமான உணவு வகைகள் அனைத்துமே மறந்து விட்டோம். அப்படி நாம் அனைவருமே மறந்த ஒன்று தான் நாம் எப்படி செய்வது என்று பார்க்க போகிறோம். அது என்னவென்றால் ஆரோக்கியமான சத்து மாவு. ஆம், இந்த சத்து மாவை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் சாப்பிடலாம். இப்ப இருக்குற குழந்தைகளுக்கு horlicks ,boost, pediasure என வித விதமான பவுடர் வாங்கி அதை பாலில் கலந்துக்கொடுக்கிறனர். இவை அனைத்துமே கெமிக்கல் கலந்தவை. இந்த சத்து மாவை இதே போல் பாலில் கலந்துக்குடித்தால் சிறு வயதில் இருந்ததே உடல் வலிமை பெரும்…………

ஆரோக்கியமான  சத்து மாவை எப்படி வீட்டில்  எளிமையாக செய்வது என்று பார்ப்போம்……..

தேவையான பொருட்கள் :-

  1. நாட்டு கம்பு 2 கிலோ
  2.  பாசிப்பயறு அரை கிலோ
  3.  கொள்ளு அரை கிலோ
  4.  மக்காசோளம் 2 கிலோ
  5.  பொட்டுக்கடலை ஒரு கிலோ
  6.  சோயா ஒரு கிலோ
  7.  தினை அரை கிலோ
  8.  கருப்பு உளுந்து அரை கிலோ
  9.  சம்பா கோதுமை அரை கிலோ
  10.  பார்லி அரை கிலோ
  11.  நிலக்கடலை அரை கிலோ
  12.  மாப்பிள்ளை சம்பா அவல் அரை கிலோ
  13.  ஜவ்வரிசி அரை கிலோ
  14.  வெள்ளை எள் 100 கிராம்
  15.  கசகசா 50 கிராம்
  16.  ஏலம் 50 கிராம்
  17.  முந்திரி 50 கிராம்
  18.  சாரப்பருப்பு 50 கிராம்
  19.  பாதாம் 50 கிராம்
  20.  ஓமம் 50 கிராம்
  21.  சுக்கு 50 கிராம்
  22. பிஸ்தா 50 கிராம்
  23.  ஜாதிக்காய் 2
  24.  மாசிக்காய் 2

செய்முறை :-

 

ராகி, சோளம், கம்பு, பாசிப்பயறு, கொள்ளு ஆகியவற்றை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.  தண்ணீரை நன்றாக வடித்த பின்னர் அதை ஒரு துணியில் கட்டி 12 மணி நேரம் கழித்து எடுத்தால், தானியங்கள் முளை விட்டு இருக்கும்.

அவற்றை 3 நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். மற்ற பொருட்களை ஒரு நாள் வெயிலில் காய வைக்க வேண்டும்.  அனைத்தையும் மொத்தமாக மாவு மில்லில் அரைத்து, 4 மணி நேரம் ஆற வைத்தால் சத்து மாவு தயார். 12 கிலோ மாவு கிடைக்கும்.
சத்து மாவு தயாரிக்க தேவையான பொருட்கள் மளிகைக் கடைகளில் கிடைக்கின்றன. தனியாக இடம் எதுவும் தேவையில்லை. வீட்டிலேயே தானியங்களை ஊற வைத்து, முளை கட்டலாம். வீட்டு வளாகத்தில் காய வைக்கலாம்.காய வைத்த தானியங்களை மாவு மில்லில் கொடுத்து அரைக்க வேண்டும்.

சத்தான இந்த சத்து மாவினால் என்ன என்ன நன்மை நமக்கு கிடைக்கும் தெரியுமா????

1 .ஒரு நபருக்கு ஒரு டம்ளர் தண்ணீர் வீதம் கொதிக்க வைக்க வேண்டும்.

2. ஒருவருக்கு 2 ஸ்பூன் மாவு வீதம் தண்ணீரில் கலந்து 2 நிமிடம் கொதிக்க வைத்தால் சத்து மாவு கூழ் தயாராகி விடும்._

3.அதில் அவரவர் விருப்பப்படி இனிப்பு அல்லது உப்பு அல்லது உப்பு, மிளகுபொடி சேர்த்து பருகலாம்.

4.எதுவும் கலக்காமல் அப்படியேகூட குடிக்கலாம்.காலையில் 2 டம்ளர் சத்துமாவு பானம் குடித்தால் காலை சாப்பாடு பூர்த்தியாகி விடும்.

5.இதன்மூலம் உடலுக்கு தேவையான சத்துகள் மற்றும் சக்தி கிடைக்கிறது.

6.கார்போஹைட்ரேட், கொழுப்பு குறைவாக இருப்பதால் உடல் பெருக்காது.

7.உடல் எடையை குறைக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்ற உணவு. காலை, மாலை வேளைகளில் அவர்களுக்கு தரலாம்.

8.முதியோர்கள் இதை அருந்தும் போது உடனடி சக்தி கிடைப்பதை உணர முடியும். எளிதில் ஜீரணிக்க கூடிய உணவு.

குறிப்பு:-  5 மாதம் கெடாது.

சத்து மாவு காய வைத்து, வறுத்து அரைக்கப்படுவதால் 5 மாதம் வரை கெடாது.

. பொதுவாக ஒரு நபர் ஒரு நாளைக்கு 50 கிராம் வரை பயன்படுத்தினால் ஒரு கிலோ பாக்கெட் 20 நாளில் தீர்ந்து விடும். இதனால், கெட்டு விடுமோ என்ற கவலையும் தேவையில்லை. இதுதான் உண்மையான நம் பாரம்பரிய சத்தான சத்து  மாவு……………………..

இன்றே இதை உங்கள் வீட்டில் நீங்களே தயாரித்து  அனைவருக்கும் கொடுத்து பயன் பெறலாம்.  குறிப்பாக குழந்தைகளுக்கு அருந்த கொடுக்கலாம் . சுவையாகவும் இருக்கும் ஆரோக்கியம் மிகுந்தது. எனவே, இதை செய்து சாப்பிட்டு அனைவரும் வளமாக, ஆரோக்கியகம் வாழ்கை வாழ வேண்டுகிறோம்…………………..

 

You may also like...