
hariskalyan-attakathi dinesh-new movie
ஹரிஸ் கல்யாண் நடிக்கும் புது படம்:-
ஹரிஸ் கல்யாண் ரொம்ப நாட்களுக்கு பிறகு புது படத்தில் நடிக்க உள்ளாராம். அவருடன் இணையும் மற்றோரு நடிகர் யார் தெரியுமா? அட்டகத்தி படத்தின் ஹீரோ தினேஷ் தான். அவரும் ரொம்ப நாட்களுக்கு பிறகு தான் இப்படத்தில் நடிகர் ஹரிஸ் கல்யாணுடன் இணைகிறார். தற்போது வளர்ந்து வரும் நடிகர்கள் எல்லாமே தனக்கான திறமையை வெளிப்படுத்த ஒரு நல்ல கதைக்களம் அமைய வேண்டும். அதுமட்டும் அல்லாமல் , கதையும் ரொம்ப வித்தியாசமா இருக்க வேண்டும். இப்போ வந்த டாடா படம் போல….
இயக்குனர் அருண்ராஜா காமராஜரின் இணை இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் “ரப்பர் பந்து” என்ற படத்தில் நடிக்கின்றனர் ஹரிஸ் மற்றும் தினேஷ். இப்படத்தின் கதாநாயகி சுவாசிகா மற்றும் வசந்தி . இப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவானதாம். சமீபத்தில் தான் இப்படத்தின் பூஜை நடைபெற்றது. பார்ப்போம் இப்படம் எப்படி வருகிறது என்று……??? டாடா போல வருமா …???