கோலி சோடா 2 திரைவிமர்சனம்,சமுத்திரக்கனி, வினோத் ஜோஸ், இயக்கம் விஜய் மில்டன்

wait loading cinibook video

2015ல் கோலிசோடா முதல் பாகம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது. அதை தொடர்ந்து இதன் இயக்குனர் விஜய் மில்டன் இதன் இரண்டாம் பாகத்தை தயாரிக்க முடிவுசெய்தார். தற்போது படத்தின் வேலைகள் முடிவடைந்து படம் ரிலீஸ் ஆகிஇருக்கிறது. இதில் சமுத்திரக்கனி மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் துணை நடிகர்களாக நடித்துள்ளனர்.

கதைக்களம்

கஷ்டபட்டு வாழ்க்கைல முன்னேறணும்னு மூணு பேர் அந்த மூணு பேருக்கு மூணு வில்லன்னால பிரச்னை வருது, முதல்ல ஒதுங்கி போற மூணுபேரும் பிறகு திருப்பி அடிக்க முயலுறாங்க இதில என்ன ஆகுதுன்னு தான் கோலிசோட 2 கதைக்களம்.

ஆட்டோ டிரைவர் சிவா, மெஸ்ல வேலைசெய்ற ஒளி, ரவுடி கும்பல்ல இருந்து வெளிய வந்து வேலைதேடுற மாறன். இவங்க மூணு பேரையும் ஒருத்தர ஒருத்தர் தெரியாது, ஆனா இவங்க மூணு பெருகும் சமுத்திரக்கனியா நல்ல தெரியும் ஏன்னா அவர் ஒரு சின்ன மெடிக்கல் ஷாப் வச்சு நடத்துறாரு அவரு இந்த மூனுபேருக்கும் நிறைய அறிவுரை சொல்லுவாரு. என்னடா கோலிசோடா முதல் படத்தோட தொடர்ச்சினு பாத்த அப்படி இல்ல. முதல் பக்கத்துல 4 சின்ன பசங்கள வச்சு அவங்க தங்களோட அடையாளத்துக்காக போராடுவாங்க அதே போல அவங்களுக்கு புத்தி சொல்ற ஒரு அம்மா ரோல் இருக்கும். அதே போல தன இங்கயும் 3பெரிய பசங்க தங்களோட அடையாளத்துக்காக போராடுற மாதிரியும் அவங்களுக்கு புத்திமதி சொல்ற மாரி ஒரு அப்பா கேரக்டர் வச்சு படம்தின் கதைக்களம் அமைச்சுருக்காரு இயக்குனர் விஜய் மில்டன். இங்கயும் முதல் பாகம் போலவே கதை சொல்ற விஷயம் எல்லாம் விஜய் மில்டன் வச்சுருப்பாரு.

திரைவிமர்சனம்

படத்தோட முதல் பகுதி கொஞ்சம் விறுவிறுப்பா போகும் அதுல திரைக்கதை நல்ல அமைச்சுருப்பாரு இயக்குனர் விஜய் மில்டன் அதே போல இதன் இரண்டாம் பகுதி அங்கேயும் இங்கேயுமா தாவூது. இதுனால படத்தை பாக்க கொஞ்சம் போறீங்கா இருக்கு. சண்டைக்காட்சிகள் பத்தி சொல்லனும்னா கொஞ்சம் அதிகமாவே இருக்குனு சொல்லலாம், அங்கங்கே நம்ப முடியாத சண்டைக்காட்சி எல்லாம் வச்சுருக்காங்க கொஞ்சம் சினிமாத்தனமா இருக்கும். கோலிசோடா போல் ஒரு படத்துக்கு ரீலிஸ்டிக் ஆனா சண்டைக்காட்சிகள் இருந்திருந்தா நல்ல இருந்திருக்கும்.

படத்துல ட்விஸ்ட் காட்சிகள் கொஞ்சம் இருக்கும் அது நல்ல பன்னிருப்பாரு எடிட்டர் தீபக் அதுக்காக அவரை பாராட்டியே ஆகணும்ங்க. பாடல் மற்றும் பின்னணி இசை பொறுத்தமட்டில் ஆச்சு ராஜாமணி பரவலாம பன்னிருக்காரு. அதேபோல படத்தின் இரண்டாம் பகுதியில் சிறிது ஜாதி பற்றிய வசனங்கள் எல்லாம் இடம் பெற்றிருக்கும் அதையெல்லாம் கொஞ்சம் தவித்திருக்கலாம்னு தோணுது. மொத்தத்தில் கோலிசோடா 2 குடும்பத்துடன் ஒருதடவை பார்க்கக்கூடிய படம்.

கோலிசோடா 2 மதிப்பெண் 

இந்தப்படத்திற்கு சினிபுக்கின் மதிப்பெண் 5க்கு 2.4 கொடுக்கலாம்

Movie cast & crew

Directed by S. D. Vijay Milton
Produced by Bharath Seeni
Written by S. D. Vijay Milton
Screenplay by S. D. Vijay Milton
Story by S. D. Vijay Milton
Starring
  • Samuthirakani
  • Chemban Vinod Jose
  • Gautham Vasudev Menon
  • Rohini
  • Subiksha
  • Krisha Kurup
Music by Achu Rajamani
Cinematography S. D. Vijay Milton
Edited by Deepak
Production
company
Rough Note
Release date
Clap_Board_Production
Country India
Language Tamil

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *