
manobala passed away.. film industry in shock
பிரபல இயக்குனரும், நடிகருமான மனோபாலா தீடிர் மரணம்… அதிர்ச்சியில் திரையுலகினர் …!!
Famous director and actor Manobala passed away today….Film industry in shock…!!
பிரபல காமெடி மற்றும் குணச்சித்திர நடிகர் மனோபாலா அவர்கள் தீடிரென இன்று காலமானார். அவரின் மறைவு திரையுலகத்திற்கு மாபெரும் இழப்பு எனலாம். அவருடைய தீடிர் மறைவால் திரையுலகினர் மட்டுமல்லாமல், அவருடைய ரசிகர்கள் என அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
மனோபாலா ஒரு நடிகர் மட்டும் அல்ல, அவர் ஒரு சிறந்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பல பரிணாமங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இருந்துள்ளார். மனோபாலா, முதல் முதலில் பாரதிராஜா அவரின் “புதிய வார்ப்புகள்” என்ற படத்தின் மூலம் ஒரு துணை இயக்குனராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். பின்பு, அவர் 20 படங்களுக்கு மேல் படம் இயக்கியுள்ளார். மேலும், நிறைய படத்தில் காமெடியன் காதாபாத்திரத்தில் சிறப்பாகவும் நடித்துள்ளார். அதுமட்டுமல்லால், அவர் ஒரு தயாரிப்பாளர்கவும் இருந்துள்ளார். இப்படி எப்போவும் ஓயாமல் உழைத்துக்கொண்டே இருப்பார். தற்போது அவருக்கு 69 வயதாகிறது. 69 வயதானாலும் ரொம்ப இளைமையாக எப்போதும் காணப்பட்டார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் மனோபாலா அவர்களுக்கு இருதய வலி ஏற்பட்டு ஆஞ்சியோ செய்யப்பட்டுள்ளது. ஆஞ்சியோ செய்த கொஞ்ச நாட்களிலேயே மனோபாலா அவர்கள் பட வேளைகளில் ஈடுபட்டு வந்தார். தீடிரென, அவர்க்கு கல்லீரல் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் கடந்த 15 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் தீடிரென இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். அவரின் மறைவுக்கு திரையுலகினர் அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஓயாமல் எப்போதும் உழைத்துக்கொண்டே இருந்தவர் இன்று ஓய்வு எடுத்துக்கொண்டு உள்ளார்.