சங்கர் இயக்கத்தில் எந்திரன் 2.0 படம் எப்படி இருக்கிறது ???

சங்கர் படம் என்றாலே அனைவரையும் பிரமிக்க வைக்கும் அளவுக்கு ஒரு பிரமாண்டம் இருக்கும் என்பது அனைவரும் அறிந்தவையே. அந்த வகையில் எந்திரனை மிஞ்சும் அளவுக்கு எந்திரன் 2.0 அமைந்துள்ளதா?? என்று பார்க்கலாம் வாங்க…

கதைக்கரு:-

படத்தில் ஆரம்பித்தில் மக்கள் பயன்படுத்தும் செல்போன் அணைத்தும் மயமாகின்றன. அதுமட்டுமல்லாமல் செல்போன் உரிமையாளர்கள் அனைவரும் ஒவ்வருவராக திடீரென இறந்து விடுகிறார்கள். இதனால் அரசு என்ன செய்வது என்று தெரியாமல் கடைசியில் டாக்டர் வசீகரன்(ரஜினிகாந்த்) அவரிடம் அலசோனை கேக்க டாக்டர் வசீகரன் எந்திரனில் பார்ட் பார்டாக தான் கழட்டி போட்ட சீட்டி ரோபோவை மீண்டும் சமூக பிரச்னை தீர்ப்பதற்காக உருவாக்கிறார்.

அதன் பின் தான் சிட்டி ரோபோவுக்கு வில்லனாக வரும் அக்சய்குமருடைய ஆரா(ஆவி) இடையில் மோதல். இதில் அக்சய்குமார் அவர்களை வில்லன் என்றும் சொல்ல முடியாது. அவரும் ஒரு சமூக பிரச்சனைக்காக தான் போராடுவார் என்பதை நாம் படம் பார்த்தால் தான் தெரியும்.

திரைவிமர்சனம்:-

இயக்குனர் சங்கர் அவர்களுக்கு முதலில் மிக பெரிய பாராட்டை தெரிவித்துக்கொள்ள வேண்டும். தமிழ் திரையுலகம் எந்த இயக்குனரும் எடுக்காத புதிய முயற்சி. பெரிய பட்ஜெட்டில் (500 கோடி) படம் பண்ணுவது மட்டும் அல்லாமல், உலக தர அளவில் ஹாலிவுட் பட அளவிற்கு இப்படத்தை எடுத்துள்ளார். படத்தில் தொழில் நுட்ப அளவில் சும்மா மிரட்டியுள்ளார். ரஜினி எப்பவும் போல ஸ்டைலானா நடிப்ப்பில் கலக்கியுள்ளார். அதற்கு ஒரு படி மேல நடிப்பில் அசைத்தியுள்ளார் அக்சய்குமார். பறவையியல் வல்லுனரகா வரும் அக்சய் சமூக அக்கறைக்காக அவர் போராடும் விதம் செம. இப்படத்தில் வில்லன் என்று யாரும் இல்லை. படத்தில் எமிஜாக்சன் தன்னுடைய பங்கிற்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

மொத்தத்தில் படத்தில் அனைத்துமே ரொம்ப சிறப்பாகவே அமைந்துள்ளது எனலாம். ஹாலிவுட் படம் பார்த்த ஒரு உணர்வு ஏற்படும் என்பது உறுதி. ஒளிப்பதிவு, தொழிநுட்ப வல்லுநர்கள் என இப்படத்தில் அனைவரும் ரொம்ப சிறப்பாக வேலை பார்த்துள்ளரர்கள். 3D தொழில்நுட்ப வேளையில் ஆச்சிரியப்படவைத்துள்ளனர். அவர்களை சிறப்பான முறையில் பாராட்டியே ஆகவேண்டும். ரகுமான் இசை படத்திற்கு மேலும் பலம் சேர்த்துள்ளது. மொத்தத்தில் சங்கர் இயக்கத்தில் இப்படம் உலகத்தை திரும்பி பார்க்க வைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. மேலும் படத்தை 3D தொழில்நுட்பத்தில் பார்த்தால் மட்டுமே தொழில்நுட்ப வேலைகள் எந்த அளவுக்கு அமைந்துள்ளது என்பதை நம்மால் உணர முடியும். அதனால் அனைவரும் 3D யில் இப்படத்தை பார்க்க வேண்டும் என்பது எனது கருத்து. இயக்குனர் சங்கர் படத்தில் சமூகத்திற்கு தேவையான நல்ல ஒரு செய்தியை சொல்ல வருகிறார். அதை நாம் படத்தை பார்த்து தெரிந்து கொள்வோம். லாஜிக் இல்லதா ஒரு சில விஷயங்களை தவிர்த்து பார்த்தால் படம் சமூக அக்கறையுடன் நம்மளை யோசிக்க வைக்கிறது. மொத்தத்தில் படம் அனைத்திலும் பிரமாண்டத்தில் நம்மளை வியக்கவைக்கிறது.

You may also like...