காவேரி மருத்துவமனை திடீர் அறிவிப்பு சோகத்தில் மக்கள்…… கருணாநிதி அவர்களுக்கு நடந்தது என்ன????

 

திமுக கட்சி தலைவர் திரு மு. கருணாநிதி கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நிலை சரியில்லாமல் காவே ரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இதை அறிந்து கழக தொண்டர்களும் அரசியில் கட்சி தலைவர்களும், மத்திய அமைச்சர்களும் அவரை பார்த்தவண்ணம் உள்ளனர். இதற்கிடையில் அவரது உடல் நிலையில் சிறிது பின்னடைவு ஏற்பட்டது என்று ஆ ராசா அவர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்தார் அதன் பிறகு தலைவர் இயல்பு நிலைக்கு திரும்பினார் என்று கனிமொழி அவர்கள் தெரிவித்தார்.
மேலும், கலைஞர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் இருக்கும் வீடியோ காட்சி ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த வீடியோ ரகசியமாக வெளிவந்துள்ளது கட்சியின் ஆதிகாரபூர்வமாக அல்ல.

இதையடுத்து முகநூல் பதிவுகளிலும், whatappகளிலும் ஒரு புகைப்படம் வளம் வந்து கொண்டிருக்கிறது அதில் தலைவர் டாக்டர் கருணாநிதிக்கு கண்ணீர் அஞ்சலி என்று பேனர் அடித்து அதை மறைவாக ஒரு சந்துக்குள் ஒளித்து வைத்தவாறு புகைப்படம் ஒன்று ட்ரெண்டிங் ஆக வலம்வந்துகொண்டிருக்கிறது.

இதற்கிடையே, இன்று (8/9/2018) மாலை தீடிரென்று காவேரி மருத்துவமனையில் இருந்து ஒரு அறிவிப்பு வந்தது. அதாவது, திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களின் உடல் உறுப்புகள் அனைத்தும் சீராக இயங்கவில்லை என்றும், அதனால் தீடிரென்று அவரின் உடல் நிலையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது என்றும், தெரிவித்து உள்ளனர். இன்னும் 24 மணி நேரம் என்று கூ றி உள்ளனர்.

அதனால், அனைத்தும் திமுக எம்பிக்களும் டெல்லியில் இருந்து சென்னை புறப்பட்டு வருகின்றனர். காவேரி மருத்துவமனை முன்பு கட்சி தொண்டர்கள், மக்கள் என அனைவரும் அலைகடலென திரண்டு தலைவா எழுந்து வா!!! தலைவா எழுந்து வா!!! என கோசமிட்டபடி உள்ளனர். அவர்கள் அனைவரும் மிகுந்த கண்ணீருடன் அங்கு தலைவர் மீண்டும் எழுந்து வர வேண்டும் என்று ஏக்கத்துடன் எதிர்பார்த்து உள்ளனர்.

You may also like...