தியா திரைவிமர்சனம், சாய்பல்லவி, நாகா ஷோவுர்யா

wait loading cinibook video

தியா திரைவிமர்சனம்

பிரேமம் என்ற மலையாள படத்தின் மூலம் பிரபலமாகி தெலுங்கு, தமிழ் ரசிகர்களையும் கவர்ந்த சாய்பல்லவி நடித்த முதல் படம் தான் தியா. 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ஆங்கிலப் ப்டமான (Unborn Sins)  என்ற படத்தின் தழுவல் தான் தியா. கர்பமாக இருக்கும் தாய் தன் கருவில் இருக்கும் குழந்தையை கலைக்க அதற்கு காரணமாக இருந்தவர்களை பழிவாங்கும் பேயாக மாறும் கருவை பற்றிய கதை தான் (Unborn Sins).  ஒஏற்கனவே குழந்தையை வைத்து தெய்வத்திருமகள் என்ற வெற்றி படத்தை த்ந்த எல்.விஜய் இம்முறை மீண்டும் குழந்தையை வைத்து தியா படத்தை ஒரு த்ரில்லர் படமாக தந்திருக்கிறார். இனி படத்தை பற்றி…

கதை

தியா திரைவிமர்சனம், சாய்பல்லவி, நாகா ஷோவுர்யா

Diya Movie Review

கதையை பற்றி மேலே சொல்லியாயிற்று. ஆம் (Unborn Sins) என்ற ஆங்கில படத்தின் கதை தான் தியாவும். சாய்பல்லவியும், நாக செளர்யாவும் கல்லூரியில் படிக்கும் போதே காதலிக்கிறார்கள். திருமணத்திற்க்கு முன்பே சாய் பல்லவி கர்பமாக பெற்றோர்கள் காதலை ஏற்றுக்கொண்டாலும் சாய்பல்லவி படிப்பு முடியும் வரை திருமணத்தை தள்ளி போட நினைக்கிறார்கள் இதற்க்காக சாய்பல்லவியின் வயிற்றில் வளரும் கருவை கலைக்கிறார்கள். 5 வருடம் கழித்து திருமணம் செய்த்து கொள்கிறார்கள். ஆனால் 5 வயது கரு பேயாக மாறி இதற்க்கு காரணமான இருவரது பெற்றோர்களையும், அதற்கு உடந்தையாக இருந்த டாக்டரையும் கொலை செய்கிறது. இறுதியில் தன் கனவனையும் கொல்ல நினைக்கிறது, சாய் பல்லவி தன் குழந்தையிடம் இருந்து கனவனை காப்பாற்றினாரா? குழந்தை என்ன்வானது என்பது க்ளைமாக்ஸ்.

விமர்சனம்

தமிழ் சினிமாவில் குழந்தையில் ஆரம்பித்து தாத்தா வரை எல்லோரையும் பேயாக காட்டியாயிற்று இனி யாரை காட்டலாம் என யோசித்து கருவையே பேயாக காட்டியிருக்கிறார்கள். இது மட்டும் புதுமை மற்றபடி அது பழிவாஙுபது எல்லாம் பார்த்து பழகிபோன காட்சிகளாக விரிகின்றது. அடுத்து இது தான் நடக்க போகிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிற திரைக்கதை தான் என்றாலும் கரு கலைப்புக்கு எதிராக ஒரு மெசேஜை பதிவு செய்திருப்பது சிறப்பு. காட்சிகள் யூகிக்கப்பட்டாளும் அலுக்கவில்லை என்பதால்  ‘தியா’ வை பார்க்கலாம்.  

 
இயக்குனரை பொருத்தவரை ஆங்கிலபடத்தின் தழுவல் கதையை கையாண்டாலும் அதை தமிழுக்கு ஏற்றபடி அழகாக தந்திருப்பது பாராட்டக்கூடியது. படத்தில் தேவையற்ற பாடல் காட்சிகளுக்கு இடம் தராததும் சிறப்பு. ஆனால் படத்திற்கு தேவையற்ற காமெடி காட்சிகள் அதிலும் ஆர். ஜே. பாலாஜி செய்யும் அலும்பு தாங்க முடியவில்லை, இவற்றை தவிர்ட்து இருக்க்லாம் இயக்குனர்.

நாயகன் நாக செளரியா தெலுஙுகு வரவு எல்லா காட்சிகளிலும் ஒரே முகபாவனையை தான் காட்டுகிறார். தமிழுக்கு புது வரவு என்பதாலும் படத்தில் இவரது காட்சிகள் குறைவு என்பதாலும் ஒகே ஆகிறார்.

சாய்பல்லவி கருவின் தாயாகவும் காட்டும் பாசமும், பரிதவிப்பும் அதே சமயம் தன் கனவனை கொல்ல துடிக்கும் குழந்தையிடம் இருந்து கப்பாற்ற எடுக்கும் முயற்சியிலும் ஸ்கோர் செய்கிறார். தமிழுக்கு நல்ல வரவு என்பதை நிருபிக்கிறார்.
படத்தின் முக்கிய பங்களிப்பாளர்கள் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் மற்றும் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷாவும் தான். ஒரு த்ரில்லர் படத்திற்கு காட்சிக்கு காட்சி என்ன தேவையோ அதை அழகாக த்ந்திருக்கிறார்கள் இருவரும்.

Movie cast & crew

Directed by A. L. Vijay
Produced by Allirajah Subaskaran
Written by A. L. Vijay
Starring Sai Pallavi
Naga Shourya
Veronika Arora
Gandhari Nithin
Music by Sam CS
Cinematography Nirav Shah
Edited by Anthony
Production
company
Lyca Productions
Distributed by Naveen
Release date
  • 27 April 2018
Running time
99 minutes
Country India
Language Tamil
Telugu

Leave a comment

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *