
ps2- promotion funcion iykkunar manirathianam speech
பொன்னியின் செல்வன் படம் எடுக்க இவர் தான் காரணம் – இயக்குனர் மணிரத்னம் பேச்சால் அதிர்ச்சி…!!!
He is the reason for making Ponni’s Selvan – director Mani Ratnam speech…!!!
பொன்னியின் செல்வன் வரலாற்று படத்தை உருவாக்க பல திரையுலக ஜாம்பவான்கள் நினைத்தனர். அது ஒரு கனவாகவே இருந்தது. ஆனால், இன்று இயக்குனர் மணிரத்தினம் அவர்களால் அது நிறைவேறியது. பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப்பெற்றது. மாபெரும் வெற்றியை தந்த முதல் வரலாற்று தமிழ் படமும் இது தான். இப்படத்தின் இரண்டாவது பாகம் முடிவடைந்த நிலையில் இப்படத்தை புரோமோட் செய்வதற்காக இப்படக்குழுவினர் அனைவரும் இந்தியா முழுவதும் சென்று வருகின்றனர்.
தற்போது, ஹைதராபாத்தில் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் படத்தில் நடித்த நடிகர்கள் கார்த்தி, ஜெயம்ரவி மற்றும் விக்ரம் ஆகியோரும் நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி என அனைவரும் கலந்துக்கொண்டனர். மேலும் தெலுங்கில் படத்தை வெளியிடும் தில் ராஜுவும் கலந்துக்கொண்டார். பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் இயக்குனர் மணிரத்னம் அவர்கள் வெளிப்படையாக பேசியுள்ளார். அவர் பேசியதை கேட்ட அனைவரும் பெருமிதமாக இருந்தனர். அப்படி என்ன பேசினார் தெரியுமா???
எழுத்தாளர் கல்கி அவர்களின் எழுத்து வடிவத்திற்கு ஒளி வடிவம் கொடுக்க பல திரையுலகினர் முயற்சி எடுத்தனர். திரு எம்.ஜி.ஆர்-இல் தொடங்கி கமலஹாசன் வரைக்கும் பல ஜாம்பவான்கள் வரைக்கும் முயற்சி எடுத்து அது யாராலும் முடியவில்லை. தற்போது இயக்குனர் மணிரத்தினம் அவர்களால் பொன்னியின் செல்வன் கதை திரைக்கதையாக வெளிவந்து வெற்றிப்பெற்றது. இயக்குனர் மணிரத்னம் அவர்கள் பேசும் போது, பொன்னியின் செல்வன் உருவாக முக்கிய காரணமே பாகுபலி இயக்குனர் ராஜமௌலி அவர்கள் தான் என்று கூறினார். ராஜமௌலியின் பாகுபலி படம் தான் பொன்னியின் செல்வன் படத்தை நான் உருவாக்கக் காரணம் என்று மணிரத்தினம் கூறினார். அதனால், இயக்குனர் ராஜமௌலிக்கு இந்த தருணத்தில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று மணிரத்தினம் அவர்கள் தெரிவித்தார். மேலும், மணிரத்தினம் பேசுகையில், ராஜமௌலியிடம் இப்படத்தை இயக்குவது பற்றி பேசும் போது ராஜமௌலி தான் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க ஆலோசனை கூறினார். அதன் படி இப்படத்தை இரண்டு பாகங்களாக எடுத்தேன் என்று கூறினார் இயக்குனர் மணிரத்தினம். அவருடைய பேச்சை கேட்டு அனைவரும் பெருமிதம் அடைந்தனர்.
பொன்னியின் செல்வன் பாகம் 2 வரும் ஏப்ரல் -28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர உள்ளது. அதையடுத்து இப்போதே இப்படத்திற்க்கான முன்பதிவு தொடங்கி வேகமாக டிக்கெட்கள் விற்பனை ஆகி வருகிறது….