
csk won the match fans celebration
CSK வெற்றியை கொண்டாடிய ரசிகர்கள்-திரையுலகினர் ட்வீட்
ஐ.பில் T -20 கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி அகமதாபாத்தில் நேற்று நடைபெற்றது. குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதி போட்டியில் மோதிக்கொண்டனர். ஏற்கனேவே, மே 29 இல் நடைபெற இருந்த இறுதி போட்டி மழையின் காரணமாக மே 30 ஒத்திவைக்கப்பட்டது. நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் முதலில் குஜராத் அணி பேட்டிங் செய்தது. பின்பு, சென்னை அணி விளையாட ஆரம்பித்த உடன் மழை குறுக்கிட்டு போட்டி தடைபட்டது. காலதாமதமாக போட்டி மீண்டும் தொடங்கியது. சென்னை அணி சிறப்பாக விளையாடி ஐந்தாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது.
CSK வெற்றியை ரசிகர்கள் பல இடங்களில் வெடி வெடித்து இனிப்பு கொடுத்துக் கொண்டாடினர். CSK வெற்றி தமிழகத்திற்கு பெருமிதம் என பலரும் பாராட்டி வருகின்றனர். தமிழக முதல்வர் அவர்கள், தோனி தலைமயிலான CSK வெற்றியை குறித்து பாராட்டியுள்ளார். மேலும், பல திரையுலக பிரபலங்களும் தனது ட்விட்டர் பக்கத்தில் CSK வெற்றியை குறித்து பகிர்ந்துள்ளார்.
பாலிவுட் நடிகர் ரன்வீர்சிங் ரவீந்திர ஜடேஜா “ஓ மை காட்” என ட்வீட் போட்டுள்ளார்..
த்ரிஷா அவர்கள்” CSK எனக்கு பேச வார்த்தைகள் இல்லை” என ட்வீட் செய்துள்ளார்.
சௌதர்யா ரஜினிகாந்த்
வரலக்ஷ்மி சரத்க்குமார் “என்ன ஒரு பைனல்” காத்திருந்ததற்கு நல்ல பலன் கிடைத்தது.
ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் “தேங்க் யூ ஜடேஜா” என ட்வீட் செய்துள்ளார்.