
prakashraj controversy post on twitter about chandirayan-3
நடிகர் பிரகாஷ்ராஜ் சந்திரயான்-3 பற்றி வெளியிட்ட டிவீட்டர் பதிவால் சர்ச்சை…..!!!
Controversy due to actor Prakashraj Chandrayaan-3’s Twitter post…..!!!
நடிகர் பிரகாஷ்ராஜ் தன்னுடைய டிவீட்டர் பக்கத்தில் சந்திராயன்-3 எடுத்த முதல் புகைப்படம் என்று குறிப்பிட்டு ஒரு கற்பனையான கிராபிக்ஸ் வீடியோவை பதிவிட்டுள்ளார்.
சந்திராயன் -3 விண்கலம் நாளைய தினம்( ஆகஸ்ட்-23 ) தரையிறங்க உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். சந்திராயன் -2 திட் டம் தோல்வி அடைந்ததை அடுத்து, தற்போது இஸ்ரோ விஞ்ஞானிகள் பல உத்திகளை கையாண்டு புதிய வடிவில் சந்திராயன்-3 விண்கலத்தை பல கோடி செலவில் உருவாக்கியுள்ளனர். சந்திரயான்-3 விண்கலம் ஜீ.எஸ்.எல்.வி -மார்க் 3 ராக்கெட் மூலம் ஜூலை 14 ஆம் தேதி சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. சந்திரயான்- 3 விண்கலம் நிலவில் தென்துருவத்தில் தரையிறங்க திட்டமிட்ட நாள் ஆகஸ்ட்-23 . தற்போது, சந்திராயன் -3 விண்கலம் நிலவின் சுற்றுவட்ட பாதையில் உள்ளது. நாளைய தினம் அதாவது, ஆகஸ்ட் -23 ஆம் தேதி சந்திரயான் 3-யிருந்தது விக்ரம் லாண்டெர் பிரிந்து வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கப் போவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் உறுதி அளித்துள்ளார். இந்திய நாடே பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது. இந்த திட்டம் வெற்றி அடைந்தால், உலகத்தில் முதல் முதலாக நிலவின் தென்துருவத்தில் கால் பாதிக்கும் நாடு “இந்தியா” என்றே மாபெரும் புகழ் நம் நாட்டிற்கு கிடைக்கும். உலக நாடுகள் மத்தியில் நம் நாடு விஞ்ஞானத்தில் ஒரு வரலாற்று சாதனையை படைக்க உள்ளது.
இந்த சமயத்தில், நடிகர் பிரகாஷ் ராஜ் அவர்கள் தன்னுடைய டீவீடீர் பக்கத்தில் சந்திராயன் -3 இல் எடுக்கப்பட்ட முதல் புகைப்படம் என்று கற்பனையாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
Hello @IndiaToday, how did you conclude that Prakash Raj was mocking Ex ISRO Chief and Moon Mission? https://t.co/jNVSigoXdo pic.twitter.com/9Rg19EM5Xm
— Mohammed Zubair (@zoo_bear) August 21, 2023
அந்த படத்தில் இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி கே.சிவன் அவர்கள் நிலவில் , டீ கடையில் டீ ஆத்துவது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனால், பலரும் அவரை கண்டித்து வருகின்றனர். இந்த புகைப்படம் மூலம் பிரகாஷ் ராஜ் அவர்கள், பிரதமர் மோடியை விமர்சிப்பதாகவும், இஸ்ரோ விஞ்ஞானிகளை கேலி செய்யும் விதமாக உள்ளது என பலரும் விமரிசித்து வருகின்றனர். இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடின உழைப்பால் நம் நாட்டிற்கு பெரும் அங்கீகாரம், பெருமை வர உள்ள நிலையில், இப்படி பிரகாஷ் ராஜ் ட்வீட் செய்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு, நடிகர் பிரகாஷ் ராஜ் அவர்கள் நான் எந்த நோக்கத்துடன் இந்த புகைப்படத்தை வெளியிடவில்லை. அவரவர் பார்க்கும் விதத்தில் தான் உள்ளதாக தெரிவித்துள்ளார்.