Chekka chivantha vaanam movie review – STR, VJS, Arawind swamy, Arun Vijay

வீடியோ – மக்கள் கருத்து

இயக்குனர் மணிரத்தினத்தின் செக்க சிவந்த வானம் – காற்றுவெளியிடை படத்திற்கு பிறகு தற்போது வெளிவந்துள்ள படம். அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற பல பெரிய நடிகர் நடிகைகளை வைத்து ஒரு தரமான படத்தை தற்போது கொடுத்துள்ளார். இவ்வளவு ஒரு பெரிய நடிகர் நடிகைகளை வைத்து எந்த சிரமமும் இல்லாமல் ஒரு பெரிய படத்தை எடுக்க முடியும் என்றால் அந்த பெருமை இயக்குனர் மணிரத்தினத்திற்கே சேரும்.

கதைக்களம்

படத்தின் தடம் வேறுஎங்கும் மாறாமல் ஆரம்பத்திலேயே கதைக்குள் படம் செல்கிறது. ஒரு பெரிய தலைகாட்டாக பிரகாஷ் ராஜின் குடும்பம் அவரது மகன்களாக அரவிந்தசாமி, சிம்பு, அருண் விஜய் இவர்கள் மூவருக்கும் தனது அப்பாவின் அந்தஸ்தை தான் அடையவேண்டும் என்ற எண்ணம் மூவருக்கும் உள்ளது. ஒருகட்டத்தில் இவர்களது இந்த எண்ணம் அவரது உடன் பிறந்தவர்களை கொன்று கூட அந்த இடத்தை நான் தான் அடையவேண்டும் என்று வெளியாக மாறுகிறது.  இவர்கள் மூவருக்கும் பொதுவாக குடிகார போலீஸ் வேடத்தில் விஜய் சேதுபதி வலம்  வருகிறார். இறுதியில் அந்த இடத்தை யார் அடைகிறார் என்பது தான் படத்தின் கதைக்களம்.

திரைவிமர்சனம்

முதலில் இயக்குனர் மணிரத்தினத்தை பாராட்டியே ஆகவேண்டும் ஏனென்றால் இவ்வளவ்வு பெரிய நடிகர், நடிகைகளை வைத்து அழகாக வேலை வாங்கி படத்தை சிறப்பாக கொடுத்ததற்கு. படத்தின் திரைக்கதையை அழகாக வடிவைத்திருக்கிறார் முதல் பாதி எப்படி இவ்வளவு விரைவில் செல்கிறதென்றே  தெரியவில்லை அப்படி ஒரு விறுவிறுப்புடன் நகர்கிறது. இரண்டாம் பகுதி சிறிது தாமதம்தான் இருந்தாலும் கிளைமாக்ஸ் வடிவைமைப்பு அதை சமன் செய்துவிடும்.

இசைபுயல் AR Rahman படத்திற்க்கு மிகவும் அருமையாக இசையமைத்திருக்கிறார், குறிப்பாக “மலை குருவி” பாடல் அனைவரது மனதையும் கொள்ளைகொண்டது. படத்தின் பின்னணி இசையிலும் குறையில்லை.

சிம்புவிற்க்கு இந்த படம் ஒரு நல்ல திருப்பம் என்றே கூறலாம். தனது நடிப்பு திறமையை பிரமாதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதே போல் விஜய் சேதுபதியின் நடிப்பும் மிகவும் நேர்த்தியாக உள்ளது. படத்தில் நடிகைகளுக்கு மட்டும் வேலைகள் கம்மியாக தான் காணப்படுகிறது. அவர்களை இன்னும் உபயோகப்படுத்தியிருந்தால் நான்றாக அமைத்திருக்கும்.

அரவிந்தசாமி நடிப்பு திகைக்க வைக்கிறது ஆனால் அவர் படத்தில் ஒரு அங்கம் என்பதால் தனியாக தெரியவில்லை. மொத்தத்தில் இந்த வார விடுமுறைக்கு ஒரு சரியான நல்ல படம். அனைவரும் தியேட்டரில் சென்று கண்டுகளியுங்கள்.

மதிப்பெண்

இந்த படத்திற்க்கு சினிபுக் 5க்கு 3கொடுக்கிறது.

Movie cast and crew

Directed by Mani Ratnam
Produced by Mani Ratnam
A. Subaskaran
Written by Mani Ratnam
Siva Ananth
Starring Aravind Swami
Vijay Sethupathi
Silambarasan
Arun Vijay
Jyothika
Aditi Rao Hydari
Aishwarya Rajesh
Dayana Erappa
Music by A. R. Rahman
Cinematography Santosh Sivan
Edited by A. Sreekar Prasad
Production
company
Madras Talkies
Lyca Productions
Distributed by Lyca Productions
Wellborn International Release (Kerala)
Release date
  • 27 September 2018
Running time
143 Minutes
Country India
Language Tamil

You may also like...

Translate »