பாடலாசிரியாக அவதாரம் எடுத்துள்ள பிரபல நடிகர்

நடிகர்,நடன இயக்குனர் மற்றும் இயக்குனர் என அவதரித்துள்ள பிரபுதேவா, தற்போது புதிதாக படலாசிரியாகி உள்ளார். பிரபு தேவா தற்போது நடித்து வரும் சார்லின் சாப்ளின் 2 படத்தில் தான் ஒரு பாடல் எழுதியுள்ளார்.


கடந்த 2002 ஆம் ஆண்டு ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபு, பிரபுதேவா மற்றும் காயத்திரி ரகுராம் நடிப்பில் வெளிவந்த சார்லின் சாப்ளின் படம் நல்ல வெற்றி பெற்றது எனலாம். 16 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் அப்படத்தின்(சார்லின் சாப்ளின் ) இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் ஷக்திஇந்த படத்திலும் பிரபு மற்றும் பிரபுதேவா மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்தில் இருந்து ஏற்கனவே ஒரு பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது அனைவரும் அறிந்தவை. அந்த படத்தில் தற்போது,பிரபுதேவா எழுதிய “இவளா இவளா ரொம்ப பிடிச்சிருக்கு” என்ற பாடலின் சிங்கள் பாடலாக நாளை வெளியாக உள்ளது.

 

நடிகர்,நடன இயக்குனர் மற்றும் இயக்குனர் என கலக்கி வந்த பிரபுதேவா தற்போது பாடலாசிரியர் என்ற அவதாரித்துள்ளார். இதை ரசிகர்கள் வரவேற்க தயாராக உள்ளனர்.

You may also like...