
CHANDIRAMUGI 2 FIRST LOOK POSTER
சந்திரமுகி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…!!
Chandramukhi 2 First Look Poster Released…!!!
சந்திரமுகி 2 படத்தின் வேட்டையன் ராஜா காதாபாத்திரத்தின் தோற்றத்தை படக்குழு வெளியிட்டது.
கடந்த 2015- ஆம் ஆண்டு சந்திரமுகி படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப்பெற்றது. பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, வடிவேல் மற்றும் நயன்தாரா ஆகியோர் நடித்திருந்தனர். காமெடியுடன் கூடிய திரில்லர் படமாக இருந்தது. இப்படத்தில் ரஜினி அவர்கள் பேசும் டயலாக் “லகலகலக” ரொம்ப பிரபலமானது.
தற்போது, பல வருடங்களுக்கு பிறகு சந்திரமுகி பாகம் 2 உருவாகிறது. இப்படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் , வடிவேல் மற்றும் ராதிகா ஆகியோர் நடிக்கின்றனர். சந்திரமுகி முதல் பாகத்தில் நடித்த வடிவேலு தவிர வேற யாரும் இதில் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் படப்பிடிப்பு மைசூர், ஹைதராபாத் மற்றும் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் நடந்ததாம். தற்போது சில தினங்களுக்கு முன்பு தான் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது படக்குழு.
இந்நிலையில், படக்குழு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் வேட்டையன் ராஜாவாக ராவாக லாரன்ஸ் ரொம்ப மாஸாக போஸ் கொடுத்திருக்கிறார். மேலும், இப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.