பாஸ்கர் ஒரு ராஸ்கல் – திரைவிமர்சனம் அரவிந்த்சாமி, அமலாபால்

   “பாஸ்கர் ஒரு ராஸ்கல்”  படம் எப்படி இருக்கு?????? 

“பாஸ்கர் ஒரு ராஸ்கல்” திரைப்படம் இன்று வெளியானது. இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போயிட்டே இருந்தது தற்போது பல போராட்டங்களுக்கு பிறகு இன்று வெளியாகியுள்ளது. மலையாளத்தில் வெளியான “பாஸ் தி ராஸ்கல்” என்ற படத்தின் ரீமேக் தான் தமிழில்” பாஸ் ஒரு ராஸ்கல்”. மலையாளத்தில் மம்முட்டி,நயன்தாரா நடித்துஇருந்தனர். தமிழில் அரவிந்த்சாமியும்,அமலாபால் நடித்து உள்ளனர். தமிழில் படம் எப்படி இருக்கு? பார்க்கலாம் வாங்க….

படத்தின் அறிமுகம்

படத்தில், தொழிலதிபர் நாசர் மகனாக வருகிறார் அரவிந்த் சாமி. அவருடைய தொழில் கட்டப்பஞ்சாயத்து, அடிதடி தான். அரவிந்த் சாமி மனைவியை இழந்து தன் மகனுடன் வாழ்கிறார். அவருடைய மகனாக ஆகாஷ் என்ற கதாபாத்திரத்தில் “மாஸ்டர் ராகவன் “சிறப்பாக நடித்துஉள்ளர். ஆகாஷ் படிக்கும் பள்ளியில் தான் அமலாபால் பொண்ணு ஷிவானியும் படிக்கிறார்.ஷிவானி கதாபாத்திரத்தில் நைனிகா (மீனா பொண்ணு) ரொம்ப அழகா நடித்துள்ளார். ஏற்கனேவே நைனிகா தெறி படம் மூலம் அறிமுகமாகி அனைவர் மனதிலும் இடம் பிடித்த பொண்ணு என்பது குறிப்பிடத்தக்கது. ஷிவானி தந்தை இல்லாத பொண்ணு, ஆகாஷ் தாய் இல்லாத பையன். இவர்கள் இருவரும் சிறந்த நண்பர்களாக இருக்கிறார்கள். இப்படத்தில் ரோபோ சங்கர்,சூரி, ரமேஷ் கண்ணா என சிறந்த காமெடி நடிகர்கள் நடித்துஉள்ளனர். அதனால் படத்தில் காமெடிக்கு பஞ்சம் இல்லைனு சொல்லாம். சரி படத்தின் கதை என்னனு பார்த்தா?? காதல் கதை தான்.

கதைக்களம்

அரவிந்த்சாமி அடிதடி, கட்டபஞ்சாயத்துனு வரும் போது சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதுவும் ரோபோ சங்கர், சூரி மற்றும் ரமேஸ்கண்ணா இவர்கள் உடன் அரவிந்த் சாமி வரும் காட்சிகளில் உண்மையில் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளனர். அரவிந்த் மனைவியை இழந்து வாழ்வது போலவே அமலாபாலும் கணவர் இல்லாமல் வாழ்கிறார். ஷிவானி தந்தை இல்லாத பொண்ணு, ஆகாஷ் தாய் இல்லாத பையன். இவர்கள் இருவரும் சிறந்த நண்பர்களாக இருக்கிறார்கள். ஷிவானி, ஆகாஷ் நட்பு மூலம் “அரவிந்த்சாமியும், அமலாபாலும் முதலில் நண்பர்களாக இருக்கிறார்கள். பிறகு இவர்களின் குழந்தைகளின் விருப்பப்படி அரவிந்த் சாமியும் அமலாபாலும் இணைகிறார்களா ?என்பது தான் கதை…….” இதற்கிடையில் அடிதடி, காமெடி என படத்தின் முதல் பகுதி விறுவிறுப்பாக நகர்கிறது. இயக்குனர் சித்திக் அழகாக முதல் பகுதியை படமாக்கி உள்ளார்.

அரவிந்த் சாமி, அமலாபால் ரொமான்ஸ் சொல்ற அளவுக்கு இல்லை. இவர்கள் இணைத்து வரும் டூயட் பாடல்களில் அரவிந்த் சாமிக்கு ரொமான்ஸ் வரவே இல்லை. அமலாபால் இந்த படத்தில் குடும்ப பொண்ணா கவர்ச்சி இல்லலாமல் நடித்து உள்ளார். மேலும் படத்தின் முதல் பகுதியை விறுவிறுப்பாக எடுத்த இயக்குனர் சித்திக் திடிர்னு அமலாபால் கணவர் உயிருடன் இருப்பதாக கதையில் ட்விஸ்ட் வைக்கிறார்.

ட்விஸ்ட்டுன் முதல் பகுதி முடிய இரண்டாவது பகுதியை எப்படி கொண்டு செல்வது என்று தெரியாமல் கதையை கொண்டசெல்கிறார். இயக்குனர் சித்திக். இரண்டாவது பகுதியில் காமெடி இல்லை. மேலும் கதை பழைய படம் போல மெதுவாக செல்கிறது. இறுதியில் இருவரும் இணைந்தார்களா? இல்லையா? என்பது தான் கதையின் முடிவு. கிளைமேஸ் பகுதியை சரியாக அமைக்க வில்லை. அது மட்டும் இல்லாமல் அமலாபால் கணவர் திடிர்னு எப்படி வந்தார் என்று ஒரு பிளஷ்பேக். அதுவும் சரியாக கதைக்கு பொருந்தவில்லை என்று சொல்லலாம்.                                      படத்தில் அரவிந்த் நடிப்பு மலையாள படத்தில் நடித்த மம்முட்டி அளவுக்கு இல்லை. அமலாபால் நடிப்புக் கூட நயன் அளவுக்கு பேசும்படி இல்லை. ஆகாஷ் கதாபாத்திரத்தில் நடித்த ராகவன் சிறப்பாக நடித்துஉள்ளர். நைனிகா நடிப்பு ஓகே. விஜய் உலகநாத் ஒளிப்பதிவு சிறப்பாக  இருந்தது. பாடல் சுமார் தான். படத்தில் ரொமான்ஸ் சுமார்.  அரவிந்த் சாமிக்கு இந்த படம் சிறப்பாக அமையவில்லைனு சொல்லலாம். அவர் நடிப்பு இந்த படத்தில் எடுபடவில்லை….

     மொத்தத்தில் படத்தின் முதல் பகுதி காமெடிக்காக பார்க்கலாம் . இரண்டாவது பகுதியில் இயக்குனர் சரியாய் அமைக்கவில்லை. படத்தில் காமெடி நல்ல இருக்கு…படத்தின் முதல் பகுதிக்காக ஒரு தடவை படத்தை பார்க்கலாம்.

You may also like...