
bharathiraja -son manoj director
இயக்குனர் பாரதிராஜாவை இயக்கும் மகன் மனோஜ்
பாரதிராஜா படம் என்றாலே 90-களில் இருந்து இப்போ வரைக்கும் மக்கள் மத்தியில் ஒரு தனி மரியாதை மற்றும் வரவேற்பு இருந்துக் கொண்டு தான் உள்ளது. பாரதிராஜா ஒரு நல்ல இயக்குனர் மட்டும் அல்ல ஒரு நல்ல நடிகரும் தான். அவர் இப்போதெல்லாம் பல படங்களில் நல்ல காதாபாத்திரங்களில் நடிக்கிறார். அவருடைய மகன் மனோஜ் தாஜ்மஹால் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதற்கு பிறகு, ஒரு சில படங்களில் நடித்தார் மனோஜ். அவர் நடித்த படங்கள் எதுவுமே அந்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.
இப்போது மனோஜ் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். தன்னுடைய அப்பாவான பாரதிராஜாவை வைத்து படம் இயக்க போகிறார். மனோஜ் படத்தை சு.சீந்திரனின் வெண்ணிலா பிச்சர்ஸ் தயாரிக்க போவதாக தெரிவித்துள்ளது. இப்படத்தில் பாரதிராஜா தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார். இப்படத்திற்கு ஜீ.வீ பிரகாஷ்குமார் தான் இசை அமைக்க போவதாக தெரிவித்துள்ளனர் படக்குழுவினர்.
மனோஜ் தமிழில் முதல் படம் இயக்க போகிறார். அவர் அப்பா பாரதிராஜா பாணியை பின்பற்றுவாரா?? இல்லை அவருக்கு ஒரு தனி பாணியை பின்பற்றுவாரா என்பதை பாப்போம்… இயக்குனராக அவர் வெற்றி பெற எங்களுடைய வாழ்த்துக்கள்.