
love movie update -barath-vaani bhojan
நீண்ட இடைவெளிக்கு பிறகு பரத்தின் 50 -ஆவது திரைப்படம்- எப்போது ரிலீஸ் தெரியுமா?
Do you know when Parath’s 50th movie will release after a long gap?
தமிழ் திரையுலகில் நடிகர் பரத் ஹீரோவாக பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், அவர் நடித்த ஒரு சில படங்கள் மட்டுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப்பெற்றது. அவர் நடிப்பிலும், நடனத்திலும் திறமையானவராக இருந்தாலும், அவரால் தமிழ் திரைலுலகில் முன்னணி ஹீரோவாக முடியவில்லை. அவர் தற்போது, நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆர்.பி.பாலா இயக்கத்தில் லவ் படத்தில் வாணி போஜன் உடன் இணைந்து நடித்துள்ளார்.இந்த படம் நடிகர் பரத்துக்கு 50 ஆவது படம்.

லவ் படத்தின் ட்ரைலர் தற்போது சில நாட்களுக்கு முன்பு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப்பெற்றது. படத்தின் ட்ரைலர் மிரட்டும் அளவு உள்ளது. இதில் நடிகர் பரத் இதுவரை இல்லாத அளவுக்கு தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் எனலாம். அந்தளவுக்கு படத்தின் ட்ரைலர் மிரட்டலாக உள்ளது.
லவ் படம் வருகின்ற ஜூலை 28 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இப்படம் வெளிவரும் சமயத்தில் ஹரிஸ் கல்யாண் நடிப்பில் உருவான LGM படமும், மற்றும் சந்தானம் நடிப்பில் டிடி ரிட்டன்ஸ் படமும் வெளிவர உள்ளதாம். எனவே, ஜூலை 28-இல் ரிலீஸ் ஆகியிருக்கும் இந்த மூன்று( பரத்தின் லவ், ஹரிஸ் கல்யாணின் LGM மற்றும் சந்தானத்தின் டிடி ரிட்டன்ஸ்) படங்களில் எந்த படம் மக்கள் மனதில் அதிக வரவேற்பை பெற போகிறது என்பது தெரியவில்லை.
பரத் நடித்திருக்கும் லவ் படம் ஏற்கனேவே, மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றதால், இப்படம் தமிழிலும் நல்ல வரவேற்பைப் பெரும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படம் மூலம் நடிகர் பரத்தின் திரையுலக பயணத்தில் ஒரு நல்ல முன்னேற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.