
benifits of applying oil on navel
இரவில் தூங்கும் போது தொப்புளில் எண்ணெய் வைப்பதனால் ஏற்படும் பலன்கள்…!!!
தொப்புளில் எண்ணெய் வைப்பதனால் ஏற்படும் பலன்கள்:-
Benefits of applying oil on navel:-
நம் உடலில் அனைத்து நரம்புகளும் சந்திக்கும் இடம் தொப்புள் . இந்த பகுதியில் தான் அனைத்து நரம்புகளும் சந்திக்கின்றன. தினமும் இரவில் தூங்குவதற்கு முன்பு தொப்புளில் எண்ணெய் வைத்தால் , நம் உடலில் உள்ள பல வியாதிகளும் குணமாகும்.
நம் முன்னோர்கள் எல்லாருமே வாரம் இரண்டு முறை எண்ணெய் தேய்த்துக் குளித்து வந்தனர். அதனால் தான், நம் முன்னூர்கள் அனைவரும் நோய் நொடி இல்லாமல் இருந்தனர். தற்போது உள்ள வேலை பளுக்காரணமாக அனைவரும் எண்ணெய் வைத்து குளிப்பதை மறந்து விட்டோம். வாரம் இரண்டு முறை எண்ணெய் வைத்து குளிக்க முடியாதவர்கள் தினமும் இரவில் தொப்பிளில் எண்ணெய் வைத்து மசாஜ் பண்ணுவதால் நிறைய நன்மைகள் உள்ளது. அவை என்ன என்ன என்று பார்ப்போம். எந்த எண்ணெய் வைத்தால் என்ன பலன் என்பதையும் பார்ப்போம்…
- வேப்பெண்ணெய்:- நம் இரவில் தூங்குவதற்கு முன்பு வேப்பெண்ணெய் வைத்து நன்கு மசாஜ் செய்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் அழியும்.முகத்தில் ஏற்படும் வெள்ளை புள்ளிகள் மற்றும் வெண்ணிற தழும்பு மாறும்.
- நெய்:- தொப்புளில் நெய் தடவினால் முகம் அழகு பெரும். சருமம் பொலிவுடன் காணப்படும்.
பாதம் எண்ணெய்:- இரவு தூங்கும் போது தொப்புளில் பாதம் எண்ணெய் வைப்பதனால் முகம் பளப்பாகும்.
கடுகு எண்ணெய்:- தொப்புளில் கடுகு எண்ணெய் தடவுதனால் உடம்பு சூடு காரணமாக ஏற்படும் உதடு வெடிப்பு சரியாகும். - விளக்கெண்ணெய்:- நாம் தொப்புளில் விளக்கெண்ணெய் வைத்து நன்கு மசாஜ் செய்தால் மலச்சிக்கல் விரைவில் குணமாகும். மூட்டு வலி, கால் வலி சரியாகும். எலும்புகள் வலுப்பெரும்.
- நல்லெண்ணெய்:- உடல் சூட்டினால் ஏற்படும் தீராத வயிற்று வலிக்கு நல்லெண்ணெய் தொப்புளில் வைத்து நன்கு மசாஜ் செய்தால், வயிற்று வலி உடனே சரியாகும். நல்லெண்ணெய் பொதுவாக எல்லாரும் பயன்படுத்தலாம். நம் உடல் சூட்டை தணிக்கும்.
- ஒவ்வொரு எண்ணெய்க்கு ஒரு பலன் உண்டு. பொதுவாகே நாம் தினமும் இரவில் தூங்கும் போது தொப்புளில் எண்ணெய் தடவி வலப்புறம் , இடப்புறம் என சுமார் 5 நிமிடம் மசாஜ் செய்தால் நம் உடம்பில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் நல்லது. நம் உடம்பு சூட்டினால் ஏற்படும் பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்.கண் எரிச்சல், கண் வலி, கால் வலி,வயிற்று வலி ,முழங்கால் வலி மற்றும் தலைமுடி உதிவர்வது போன்ற அனைத்து விதமான பிரச்சனைகளும் குணமாகும் தொப்புளில் எண்ணெய் வைப்பதனால்