பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் இன்று இயற்க்கை எய்தினார்

பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் இன்று காலமானார்.அவருக்கு வயது 71.மூச்சு திணறல் காரணமாக அவர் இறந்தாராம். மூச்சு திணறல் வந்து நேற்று இரவு சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிறகு சிகிச்சை பலன் இல்லாமல் இன்று உயிர் பிரிந்தது.

அவர் 1946இல் தஞ்சை பழமார்நேரி கிராமத்தில் பிறந்தார்.பின்பு தமிழ் மீது பற்று காரணமாக சிறுகதைகள் கவிதைகள், நாவல்கள் என எழுத தொடங்கினார்.அவர் இதுவரை 200க்கும் மேற்பட் நாவல்கள் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .மிகவும் சிறந்த நாவல் என்றால் மெர்குரி பூக்கள் ,இரும்பு குதிரைகள் ஆகும்.
வெறும் எழுத்தாளராக மட்டும் அல்லாமல் சினிமா துறையிலும் சிறந்து விளங்கி உள்ளார். மிகவும் பிரபலமான சில படங்களுக்கு வசனங்கள் எழுதியுள்ளார். அதில் சில படங்கள் பாட்ஷா ,குணா,நாயகன் ,முகவரி ,ஜீன்ஸ் ,புதுப்பேட்டை உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் மற்றும் திரைக்கதை எழுதியுள்ளார் .மேலும் பாக்யராஜ் நடித்த “இது நம்ம ஆளு” படத்தை இயக்கியும் உள்ளார்.

Rajinikanth payed his condolences to Bala Kumar

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று பாலகுமாரன் இறுதிச்சடங்கிற்கு நேரடியாக வந்து அஞ்சலி செலுத்தினர். இதுபோல தமிழ் சினிமா துறையினர் பலரும் தங்கள் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.