
ayalaan movie update-release date annouced
சிவகார்த்திகேயனின் அயலான் பட அப்டேட்…ரசிகர்கள் கொண்டாட்டம்..!!!
சிவகார்த்திகேயன் நடிப்பில், ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக உருவாகிக்கொண்டிருக்கும் படம் தான் அயலான். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ளார். இப்படத்திற்கு இசைப்புயல் ஆ.ர்.ரகுமான் தான் இசையமைத்துள்ளார். இப்படம் வேற்று கிரக வாசிகளின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதாம். புதிய தொழில்நுடப்பத்தை பயன்படுத்தி கே.ஜெ.ஆர் ஸ்டுடியோஸ் பெரிய பஜ்ஜெட்டில் உருவாக்கி வருகிறது. மேலும் இப்படத்தில், அவதார் படத்தில் பணியாற்றிய தொழிநுட்ப வல்லுநர்கள் தான் இப்படத்திலும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளதாகவும், கிராபிக்ஸ் வேலை மட்டும் மீதம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளத் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தின் ரிலீஸ் தேதி பற்றி தனது Twitter பக்கத்தில் தெரிவித்துள்ளது. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் அயலான் படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் கே.ஜெ.ஆர் ஸ்டுடியோஸ் மிகப் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, வரும் தீபாவளிக்கு தனுஷின் “கேப்டன் மில்லர்” படமும் மற்றும் கார்த்தியின் “ஜப்பான்” படமும் வெளியாகும் எனத் தெரிவித்துள்ள நிலையில், அந்த வரிசையில் தற்போது சிவகார்த்திகேயனின் “அயலான்” படமும் இணைந்துள்ளது. வருகின்ற தீபாவளி சரவெடியாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்…..!