அட்லீக்கு வந்த சோதனையை பாருங்களேன்….!!!!

wait loading cinibook video

இயக்குனர் அட்லீ ராஜா ராணி படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் திரையுலகில் தன்னெக்கென ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக்கொண்டவர் என்றால் அது மிகையாது. குறிகிய காலத்தில் மக்களின் மனதை கவரும் வகையில் படங்களை கொடுத்து உள்ளார். ராஜா ராணி தொடர்ந்து விஜயுடன் இணைந்து தெறி, மெர்சல் என தொடர்ந்து வெற்றி படங்களைக் கொடுத்து வருகிறார். தற்போது அவரின் அடுத்த படத்திற்கு தன்னை தயார்படுத்தி வருகிறார். ஆனாலும், அவர் மீது ஒரு குற்றசாட்டு எப்போதும் இருந்து தான் வருகிறது. அவர் இயக்க்கும் படங்கள் ரீமேக் படமாக தான் உள்ளது. ராஜா ராணி முதல் மெர்சல் வரை அனைத்துமே ரீமேக் தான் என்ற குற்றசாட்டு உள்ளது. மெர்சல் படம் வெளிவருவதற்கு முன்பே பல சர்ச்சைக்கு உட்பட்டு பின்பு தான் வெளியானது. மெர்சல் BOX ஆபீஸ் வசூல் அள்ளியது என்றுக் கூறலாம்.

தற்போது படம் வெளிவந்து நல்ல வசூலை பெற்ற பின்பு அட்லீ மீது புகார் கொடுத்துள்ளார் ஒரு தயாரிப்பாளர்.

அட்லீக்கு வந்த சோதனையை பாருங்களேன்....!!!!

அதாவது, மூன்று முகம் என்ற படத்தின் ரீமேக் பண்ணும் உரிமையை ஒரு தயாரிப்பாளர் வாங்கியுள்ளார். அவர் மூன்று முகம் படத்தின் கதை தான் மெர்சல் என்றும் அதனால் அட்லீ எனக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று புகார் செய்துள்ளார். அந்த தயாரிப்பாளர் அளித்த புகாரின் படி மூன்று முகம் கதையை மெர்சலுடன் சேர்த்து கதை ஆசிரியர்கள் ஒப்பிட்டு பார்கக உள்ளனர். ஒப்பீட்ட பின்பு படம் ஒத்து போயிருந்தால் அட்லீ அந்த தயாரிப்பாளருக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும், இல்லையேல் அட்லீ இனி படமே எடுக்க கூடாது என்று தெரிவித்துள்ளனர். இயக்குனர் அட்லீ இதை மறுத்து உள்ளார். பார்ப்போம் ………..

Leave a comment

You may also like...