பாலியல் ரீதியான தொல்லை-மறுத்ததால் ஏற்பட்ட இழப்பு..!!!அதிதி ராவ் ட்வீட் செய்ததால் அதிர்ச்சி

wait loading cinibook video

பட வாய்ப்புக்காக தன்னை அட்ஜஸ்ட் பண்ண சொன்னார்கள் , நான் மறுத்த காரணத்தால் 3 படங்கள் நழுவியது என்கிறார் அதிதி ராவ்.

மணிரத்தினம் இயக்கத்தில் காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான நடிகை அதிதி ராவ். இவர்க்கு தமிழ் சினிமாவில் 3 படங்கள் நடிக்க வாய்ப்பு வந்ததாம். ஆனால், படத்தில் புதிதாக நடிக்க வந்த என்னை அட்ஜஸ்ட் பண்ணி போகணும் என்று கூறியதால். அவர் நடிக்க மறுத்து வெளியேறிவிட்டாராம் .தற்போது அதிகமாக பேசப்படும் டுவிட்டு செய்தி எதுவென்றால் #MEE TOO என்ற பக்கத்தில் பெண்கள் தனக்கு ஏற்பட்ட பாலியல் ரீதியான தொல்லைகளை தெரிவிக்கலாம் என்று ஓபன் செய்துள்ளனர். அதில் தான் பல நடிகைகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் பெண்கள் தனக்கு நேர்ந்த தொல்லைகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாடகி சின்மயி பிரபல படாசிரியர் வைரமுத்து தனக்கு பாலியல் ரீதியான தொல்லைக் கொடுத்தாக என தெரிவித்து சின்மயி ஏற்கனவே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

பாலியல் ரீதியான தொல்லை-மறுத்ததால் ஏற்பட்ட இழப்பு..!!!அதிதி ராவ் ட்வீட் செய்ததால் அதிர்ச்சி

அந்த வகையில் தற்போது அதிதிராவ் #MEE TOO என்ற டீவீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளவை என்னவென்றால், நடிக்க வந்த புதிதில் தமிழ் சினிமாவில் எனக்கும் பாலியல் ரீதியான தொல்லைகள் வந்ததாகவும், அவர்களுக்கு அட்ஜஸ்ட் பண்ணி போக மறுத்ததால் எனக்கு 3 படங்களின் வாய்ப்பு கைவிட்டு போனது, என்று தெரிவித்துள்ளார். மேலும், அவர் தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள் மற்றும் நடிகைகள் மட்டும் தான் எந்தவித அட்ஜஸ்ட்மென்ட் இல்லாமல் நடித்து முன்னேற முடியும் என்றும் என்னை மாறி புதிதாக வரும் நடிகைகள் பாலியல் தொல்லைகளை கடந்து தான் முன்னரே முடியும். அந்த வகையில் நான் ஒரு வித கட்டுப்பாட்டுடன் இருப்பதால் எனக்கு பட வாய்ப்புகள் குறைவாக குறைவாகத்தான் உள்ளது. அதனால், எனக்கு நிம்மதி தான். பேர் புகழ் வாங்க வேண்டும் என்பதற்காக நான் எப்போதும் யார்க்கும் அட்ஜஸ்ட் பண்ண போவதில்லை என்று பகிரங்கமாக தெரிவித்துள்ளார்..

Leave a comment