Annanukku Jai Movie Review | அண்ணனுக்கு ஜே விமர்சனம்

wait loading cinibook video

Annanukku Jai Movie Review! Annanukku Jai is a political comedy film written and directed by Rajkumar. Annanukku Jai star cast has Attakathi Dinesh, Mahima Nambiar, RJ Balaji, Radha Ravi, Mayilsamy and Anjali Rao.

கதைக்களம்

அரசியலில் பதவிகள் ஒருஹீரோவுக்கு கெத்து என முடிவு எடுக்கும் நாம அட்டகத்தி தினேஷ், அதற்கேற்ப அதற்கேற்ப இந்த படத்தை வடிவமைத்திருக்கிறார். இதனால் இவருக்கு ஏற்பட்ட இன்னல்கள் என்னென்ன, பதவியை பிடித்து நாற்காலியில் அமர்ந்தாரா இல்லை மண்ணை கவ்வினார் என்பதை `அண்ணனுக்கு ஜே’வில் ஜாலியாகச் சொல்லியிருக்கிறார்கள்.

“மட்ட சேகர்” படத்தின் நாயகன் தினேஷ். லைட்டா குடித்தாலே மாட்டாயாகிறார் நம்ம ஹீரோ அதனால் அவரது பெயர் மட்ட சேகர் என்று மருவியது. சேகரின் அப்பா முருகேசன் (மயில்சாமி) கள்ளுக்கடை வைத்து வியாபாரம் நடத்திவருகிறார். எதிர்துருவதில் படத்தின் வில்லன் செல்வா (தீனா) ஒயின் ஷாப் நடத்தி வருகிறார். கள்ளுக்கடையால் அவரது வியாபாரம் மிகவும் மோசமான நிலைக்கு செல்கிறது. தன்னுடைய அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி முருகேசனை காவல்நிலையத்தில் வைத்து மகன் சேகர் முன்னாலேயே அடித்து அவமானப்படுத்தி, அவரது தொழிலையும் முடக்குகிறார். இதனால் அவனை பழிவாங்கும் விதமாக தன் தந்தைக்கும் கட்சிப் பதவி பெற்றுத்தர கிளம்பும் சேகர் பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். அது என்ன சிக்கல்? அதை எப்படி சரி செய்கிறார்? பிறகு என்ன ஆகிறது? என்பதை எல்லாம் நிறைய காமெடி சேர்த்து சொல்கிறது படம்.
தினேஷுக்கு இந்தப் படம் `அட்டகத்தி’ 2.0 என்றே சொல்லலாம். அவர் சீரியஸாகச் செய்வதெல்லாம் காமெடியாகவே இருக்கிறது. முதல் பாதி முழுக்கக் குடித்துவிட்டு மட்டையாவது, காதலி பின்னால் சுத்துவது எனப் பொழுதைக் கழிக்கும் இளைஞராகவும் இரண்டாம் பாதியில் எதிரிகளுக்கு ஆட்டம் காமிக்கும் அரசியல்வாதியாகவும் நடிப்பில் வித்தியாசம் காட்டியிருக்கிறார்.

இந்த அரசியல் படத்தில் ஹீரோயினுக்கு சின்ன கேரக்டர்தான். இருந்தாலும், மனதில் பதிகிறார் மகிமா. `ஜானி’ ஹரி, மயில்சாமி, ராதாரவி, ஸ்டன்ட் தீனா, பழைய ஜோக் தங்கதுரை என முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிலர் தங்களுக்குக் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள்.

 

திரைவிமர்சனம்

ஒயிட்னஷொப்களுக்கு மாற்று கள்ளுகடை என்பதைப் காட்சிகளாக அமைத்து அதன் அரசியலை வெளியில் கொண்டுவந்த சினிமாவாகக் கொடுத்த முதலில் இயக்குநர் ராஜ்குமாருக்குப் முதலில் பாராட்டுகள். ஆனால், நிகழ்காலத்தில் நடக்கும் அடிமட்ட லெவல் அரசியலை நையாண்டி செய்யும் முயற்சி, அரைக்கம்பத்தில்தான் பறக்கிறது. இன்னும் அவற்றில் கள உண்மைகளை நிறையச் சேர்த்து, அதைப் வெளிகொண்டுவந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். வசனங்களில் நக்கலும் நையாண்டியுமோடு யதார்த்தமும் தூக்கல். ஜாலியான படம்தான் என்றாலும் முழுக்க முழுக்க பாசிட்டிவாக செல்லும் திரைக்கதை, அடுத்தடுத்து இதுதான் நடக்கப்போகிறது என்பதை எளிதாகக் கணிக்க வைத்துவிடுகிறது. இசையமைப்பாளர் அரோல் கொரேலி, கேமரா மேன் விஷ்ணு ரங்கசாமி, எடிட்டர் ஜி.பி.வெங்கடேஷ் என டெக்னிக்கல் டீமிடம் நன்றாக வேலை வாங்கியிருக்கும் இயக்குநர், கன்ட்டென்ட்டில் அதிகம் கவனம் செலுத்தியிருக்கலாம் எனத் தோன்ற வைக்கிறது படத்தின் திரைக்கதை.

மாபெரும் சேர்ப்பு விழா, மாநிலங்கள் தழுவிய போராட்டம் எனப் பெரிய பெரிய நிகழ்வுகள் நடந்தாலும் அதில் மிகக் குறைவான கூட்டம் மட்டுமே காணப்படுகிறது. அரசியல் நிகழ்வு என்றாலே ஆட்கள் கூட்டம் ஒரு முக்கியப்பங்கு வகிக்கும் என்பதை இயக்குனர் மறந்து விட்டார் போல. அதேபோல் படம் எந்தக் காலகட்டத்தில் நடக்கிறது என்ற எந்த அறிவிப்பும் இல்லாமல் இருக்கிறது. சுவரில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களில் 2015 என்று போட்டிருப்பதைப் பார்த்து ஆடியன்ஸே புரிந்துகொள்ளட்டும் என இயக்குநர் நினைத்திருப்பார் போல.

 

மதிப்பெண்

இந்த படத்திற்க்கு சினிபுக் 5க்கு 2.2 கொடுக்கிறது

Leave a comment

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *