
aloea vera benifits
சோற்றுக்கற்றாழையில் இத்தனை நன்மைகளா..???
Are there so many benefits of aloe vera..???
சோற்றுக்கற்றாழை என நாம் அனைவராலும் அழைக்கப்படும் இந்த செடியில் நிறைய மருத்துவக்குணங்கள் உள்ளன. பொதுவாக காட்டுப்பகுதிகளில் அதிகமாக காணலாம். பலரும் இந்த மூலிகை செடியின் நன்மைகளை தெரிந்துக்கொண்டு தற்போது வீட்டில் வளர்க்க ஆரம்பித்து விட்டனர். ஆரோக்கியத்திற்கு மட்டும் அல்லாமல், அழகு சம்பத்தப்பட்ட விஷயத்திற்கும் இந்த கற்றாழை பயன்படுகிறது. இந்த கற்றாழைக்கு பலபெர்யர்கள் உள்ளன. அவை, குமரி, கன்னி, செயலானபூமாது, மற்றும் யடவானத்திர சூலி என்று பலப்பெயர்கள் உள்ளன.
சோற்றுக்கற்றாழை மருத்துவ குணங்கள்:-
சோற்றுக்கற்றாழையின் மடலை வெட்டி எடுத்தவுடன் அதிலிருந்து மஞ்சள் நிற திரவம் வெளியேறும். மஞ்சள் நிற திரவத்தை ஒரு பாத்திரத்தில் புடித்து அதை நன்கு காய வைத்துக்கொள்ளவும். அதன் பெயர் தான் மூசாம்பரம் என்றும், கரிய பொவளம் என்றும் பெரியோர் சொல்லிகின்றனர். இந்த மூசாம்பரம் மூட்டு வலிக்கு, மூட்டு வீக்கத்திற்கு நல்ல அருமருந்து. வயதானவர்கள் பலரும் மூட்டு வலி மற்றும் மூட்டு வீக்கம் என அவதிப்படுகின்றனர். அவர்கள், கரிய பொவளம் எடுத்து மூட்டின் மீது நன்கு தேய்த்து வந்தால் போதும் மூட்டு வலி மற்றும் வீக்கம் உடனே சரியாகும். நாம் அந்த மஞ்சள் திரவத்தை கழிவு என நினைப்போம். ஆனால், அந்த கழிவே ஒரு நல்ல மருந்தாக பயன்படுகிறது.சோற்றுக்கற்றாழை மடலின் உள்ளே இருக்கும் சதை பகுதியை எடுத்துக்கொண்டால் அதிலும் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன.
சோற்றுக்கற்றாழையின் ஜெல் போன்ற பகுதி நம் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. கற்றாழை ஜெல் பகுதியை எடுத்து நான்கு அல்லது ஐந்து முறை தண்ணீரில் நன்கு அலசி எடுத்து அதை மோருடன் அடித்து குடித்து வந்தால் உடல் சூடு தணியும், நீர் கடுப்பு மற்றும் அல்சர் குணமாகும்.- கற்றாழை மடலின் உள்ளே இருக்கும் ஜெல் பகுதி வறண்ட சருமத்திற்கு பயன்படுத்தலாம். வறண்ட மேனி உடையவர்கள் கற்றாழை ஜெல் நன்கு தண்ணீரில் கழுவி பின்பு முகத்திற்கு பயன்படுத்தலாம்.
- மேலும், கற்றாழை மடலின் உள்ளே இருக்கும் ஜெல் பகுதி சிறுதளவு எடுத்து நாம் இரவில் தூங்குவதற்கு முன்பு கண்களில் வைத்து கட்டி கொண்டால் கண் வலி மற்றும் கண் சிவப்பதால் குணமாகும்.
- பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுக்களுக்கான சிறந்த மூலிகை. கற்றாழையின் மஞ்சள் நிற திரவம் (கரிய பொவளம்) உடலில் ஏற்படும் வலி மற்றும் வீக்கம் ஆகியவற்றிக்கு நல்ல மருந்து.