
atchaya thiruthi- 2023 special n
அட்சய திருதியை அன்று தங்கம், வெள்ளி வாங்க என்ன காரணம் தெரியுமா? இந்த வருட அட்சய திருதியை எப்போது? வாங்க பார்க்கலாம்…
Do you know the reason to buy gold and silver on Akshaya Trithi? When is Akshaya Trithi this year?
அட்சய திருதியை என்பது சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு அதாவது, வளர்பிறை நாட்களில் மூன்றாவது நாளில் திருதியை திதி வரும். அந்த நாள் தான் அட்சய திருதியை ஆகும். இந்நாளில் தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் பிளாட்டினம் போன்ற பொருட்கள் வாங்கினால் வீட்டில் செல்வம் சேரும் என்பது ஐதீகம். தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த நகைகள் வாங்க முடியாதவர்கள் உப்பு, மஞ்சள் போன்ற மங்களகரமான பொருட்கள் வாங்கி பயன் பெறலாம்.
அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் சேரும் என்பதற்கு காரணம் தெரியுமா??
அட்சய திருதியை நாளில் தான் பெருமாளின் மார்பில் லட்சுமி நிரந்தமாக தங்கினால் என்பது ஐதீகம். இந்த நாளில் தான் அஷ்ட லக்ஷ்மிகளும் தோன்றி சகல சௌபாக்கியங்களும் தந்து அருள்புரிய ஆரம்பித்தனர் என்பது ஐதீகம். அதனால் தான், இந்த அட்சய திருதியை அன்று பொன்னும் பொருளும் வாங்கினால் லட்சுமி அருள்புரிந்து நமக்கு செல்வ செழிப்பான வாழ்க்கையை கொடுப்பாள் என்பது முன்னூர்கள் நமக்கு சொன்னது . இதை தான் நாம் கால காலமாக பின்பற்றிகிறோம்.
இந்த வருடம் அட்சய திருதியை வருகின்ற சித்திரை 9 மற்றும் 10 என இரண்டு நாள் வருகிறது. அதாவது, ஏப்ரல் 22 சனி கிழமை மற்றும் 23 ஞாயிற்று கிழமையில் வருகிறது. பொதுவாக, அட்சய திருதியை அன்று தங்கம் மற்றும் வெள்ளி வாங்குபவர் குரு ஓரையில் அல்லது சுக்கிர ஓரையில் வாங்கினால் மிக மிக சிறப்பு. அது தான் சிறந்த நேரம். ஏப்ரல் 22 ஆம் தேதி அன்று குரு ஓரை காலை 7 மணியிலிருந்து 8 மணிவரைக்கும் மற்றும் பிற்பகல் 2 மணியிலிருந்து 3 மணிவரைக்கும் உள்ளது. இந்த குரு ஓரை தங்கம் மற்றும் வெள்ளி வாங்கலாம். மேலும், சுக்கிர ஓரை எப்போது என்று பார்த்தால் ஏப்ரல் 22 – இல் காலை 10 -11 மற்றும் மாலை 5 -6 மணி ஆகும். இந்த நேரத்திலும்,தங்கம் வெள்ளி வாங்கலாம். ஏப்ரல் 23 -ஆம் தேதியில் காலை 7 மணி முதல் 8 மணி வரையும் மற்றும் பிற்பகல் 11 மணி முதல் 12 மணி வரையிலும் தங்கம் மற்றும் வெள்ளி வாங்க சிறந்த நேரம் ஆகும். இந்த நாளில் தங்கம் வெள்ளி வாங்க இயலாதரவர்கள், உப்பு, மஞ்சள், புது துணி, அரிசி மறுப்பு மற்றும் பூஜை சாமான்கள் ஏதாவது ஒன்று, சாமி படம் போன்ற மங்களகரமான அனைத்தும் வாங்கலாம்.