Ajith appointed as UAS Advisory in MIT!!!

wait loading cinibook video

அஜித் ஏதோ ஹெலிகாப்டர் UAS(Unmanned Aircraft Systems Advisory) அட்வைஸர்ன்னு சொல்ராங்க என்னன்னு பாக்கலாம் வாங்க!!!

சென்னை MIT(Madras Institue of Technology) எனப்படும் தொழில்நுட்ப கல்லூரியில் ஆளில்லா விமான கண்டுபிடிப்பதற்கான(Drone Mission) ஆய்வு ஒன்று நடத்திக்கொண்டிருக்கிறது. அந்த ஆய்வுக்கான பணியில் ஈடுபட்டுள்ள பேராசிரியர்ககளுக்கும் மாணவர்களுக்கும் உதவிபுரிந்து வருகிறார் தல அஜித். இந்த ஆய்வு எதற்காக என்று பார்த்தால் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் நடைபெறும் மிகவும் புகழ்பெற்ற “மெடிக்கல் எக்ஸ்பிரஸ் – 2018 யுஏவி சேலஞ்ச்” எனும் போட்டியில் எம்ஐடி வெற்றி பெறுவதற்காகத் தான் இந்த ஆய்வு நடந்து கொண்டிருக்கிறது.

இந்த போட்டியின் கடைசி சுற்று, வரும் செப்டம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. இயற்கை சீற்றங்களால்அவதிப்படும் மக்களையும் மற்றும் வெகுதொலைவில் உள்ள கிராமங்களில் நோய்வாய்ப்பட்டுள்ள மக்களின் ரத்த மாதிரிகளை எடுத்துவரவும் இந்த ஆளில்லா விமானம் பெரும் உதவியாக இருக்கும் என்ற நோக்கில் MITகுழு இந்த ஆய்வை நடத்தி வருகிறது.

இதுவரை இந்த மெடிக்கல் எக்ஸ்பிரஸ் போட்டியில் பங்கு பெற்ற 100நாடுகளில் தற்போது 55நாடுகள் மட்டும் அடுத்தகட்ட சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது. இதில் நம் நாடும் ஒன்று என்பதில் பெருமை கொள்கிறோம்!!! மேலும் இந்த போட்டியில் வெற்றி பெறவும், நம் நாட்டின் பலத்தை காட்டவும், அஜித் மிகவும் ஆர்வமாக தன் பணியை தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்.

பள்ளி மாணவராக இருக்கும்போதே ஏரோ மாடலிங்கில்(Aeromodelling) விருப்பம் கொண்டவர் நடிகர் அஜித்.மேலும் ரிமோட் கண்ட்ரோல் வாகனங்களை இயக்குவதிலும் சோதனை செய்வதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அவர் இந்த பதவியை மிகுந்த விருப்பத்தோடு செய்துவருகிறார்.

மேலும் MITயின் ஏரோஸ்பேஸ்(Airspace) ஆய்வு மையத்தின் பொறுப்பு இயக்குநரான துணை பேராசிரியர் கே.செந்தில்குமார் இதுகுறித்து கூறுகையில் புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி போட்டிக்கு தயாராகிக் கொண்டு வருகிறோம். இந்த துறையில் அஜித்தின் திறமை மற்றும் அனுபவத்தால் எங்களின் எண்ணம் வலுப்பெறும்” என்கிறார்.

அஜித் இந்த பணிக்காக வாங்கும் சம்பளம் ஒரு Visitக்கு ரூபாய் 1000 தான்.   சினிமா துறையில் பலகோடிகளில் சம்பளம் வாங்கும் அஜித் இருந்தாலும், இந்த சிறுதொகைக்காக இந்த பணியை செய்வதிலிருந்து தெரிகிறது அவருக்கு இந்த துறையிலுள்ள எவ்வளவு நாட்டம் என்று!!!  மேலும் இந்த தொகையை கூட அவர் அங்கு பயிலும் ஏழை மாணவர்களுக்கு கொடுத்து உதவுவதாக கூறியுள்ளார்.

Leave a comment

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *