நயன் எடுக்கும் புதிய அவதாரம் என்ன தெரியுமா??? அடுத்த படத்தில்……..!!!!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா விசுவாசம் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தமிழ் சினிமா துறையில் ஹீரோவுக்கு சமமாக தன்னெக்கென முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நாயகி என்றால் அது நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன் தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த வகையில் இந்த வருடம் வெளியான கோலமாவு கோகிலா மற்றும் இமைக்கா நொடிகள் போன்ற படங்கள் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படங்கள். இந்த படங்கள் நயன்தாராவுக்கு வெற்றி படமாக அமைந்தது மட்டும் அல்லாமல் சினிமா துறையில் அவருக்கு ஏற்கனவே இருந்த அந்தஸ்து ஒரு படி உயர்ந்தது என்றேக் கூறலாம்.

நயன்தாரா தற்போது நடிக்க இருக்கும் படத்தில் புது முயற்சியாக இரட்டை வேடத்தில் நடிக்க போறாராம். லட்சுமி,மா போன்ற குறுபடங்களை இயக்கிய சர்ஜன் தற்போது இயக்கவிருக்கும் படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளாராம். தற்போது, இந்த படத்திற்கு “ஐரா” என பெயரும் வைத்து அதன் பிரஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.

 

இந்த படத்தின் தயாரிப்பாளர் கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் சார்ந்த ராஜேஷ். மேலும், இந்த படத்தில் நயன் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஒரு பேய் பங்களாவில் காட்சியாக்கப்படுகிறதாம். படத்தின் வேலைகள் விரைவில் முடிந்து படம் வரும் கிறிஸ்துமஸுக்கு வெளியிடப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

You may also like...