18MLA களின் பதவிநீக்க வழக்கின் பரபரப்பு தீர்ப்பு – இருவேறு தீர்ப்புகள்

தமிழ்நாட்டின் சமீபகாலமாகவே சில முக்கிய வழக்குளின் தீர்ப்புகள் குறுகிய கால இடைவெளியில் வெளிவந்துகொண்டிருக்கிறது. ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கு, ராசா கனிமொழி 2g ஸ்பெக்ட்ரம் வழக்கு போன்ற பல வழக்குகளின் தீர்ப்புகள் வெளிவந்து தமிழக்தில் பரபரபு சூழல் நிலவிவந்தது. அதுபோல தற்போது அதிமுக கட்சியில் 18mlaகளின் பதவி நீக்கம் ஒரு முக்கிய தீர்ப்பாக எதிர்பார்க்க பட்டது. அதன் தீர்ப்பு தற்போது வெளிவந்து இருக்கிறது.

சட்டசபையில் சபாநாயகர் 18எம்.எல்.எ களையும் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார். இதை தொடர்ந்து 18எம்.எல்.எ களும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதை தொடர்ந்து சென்னை உயர்நிதி மன்றத்தில் 2டம் அமர்வில் தலைமை நீதிபதி மற்றும் மூத்த நீதிபதிகள் விவாதித்து இருவரும் இருவேறு தீர்ப்பு வழங்கியுள்ளார், தீர்ப்புகளின் விபரங்கள், தலைமை நீதிபதி சபாநாயகர் எடுத்த முடிவு செல்லும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளார் ஏன்னென்றால், சபாநாயகருக்கு முடிவெடுக்கும் அதிகாரம் இருக்கிறது என்று கூறியுள்ளார். மற்றொரு மூத்த நீதிபதி சுந்தர் சபாநாயகர் கூறியது சட்டத்திற்குட்பட்டு இல்லை எனவே அவரது முடிவை ஏற்க்க முடியாது என்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.

இவ்வாறு இருவேறு தீர்ப்புகள் வந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியே மற்றொரு நீதிபதியை தேர்வுசெய்து இதனை மேலும விவாதித்து இறுதி தீர்ப்பை வெளியிடபடும் என்று கூறியுள்ளார்.

You may also like...