After Thani oruvan JayamRavi and Aravind Swamy join in Bogan movie

ஜெயம் ரவி, அரவிந்த்சாமி நடித்து 2015ல் வெளிவந்த “தனி ஒருவன்” மாபெரும் வெற்றிபெற்று மக்களிடம் மிகச்சிறந்த வரவேற்பை பெற்றது. அதில் ஜெயம் ரவி 2015ன் சிறந்த நடிகர் என்ற IIFA விருது வழங்கியது அரவிந்த் சாமியும் தனது மிகசிறந்த நடிப்பை வெளிபடுத்தி நீண்ட இடைவேளைக்கு பிறகு தனது நடிப்பினால் அனைவரையும் கவர்ந்தார். இதை தொடர்ந்து இருவரும் தற்போது மற்றொரு படம் நடித்து கொண்டிருகின்றனர்.
லக்ஷ்மன் இயக்கத்தில், பிரபு தேவா தயாரிப்பில் <b>”போகன்” </b> படபிடிப்பின் வேலைகள் நடந்து கொண்டிருகிறது இதில் நாம் அனைவரும் மிகவும் ரசிக்கும் அரவிந்த் சாமி & ஜெயம் ரவி “தனி ஒருவன்” படத்திற்கு பிறகு மறுபடியும் இணைகிறார்கள். ஹன்சிகா மொத்வனி கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்பது இன்னும் இப்படத்திற்கு பலம் சேர்த்து உள்ளது இவர் ஜெயம் ரவியுடன் “ரோமியோ ஜுலிஎட்”, “எங்கேயும் காதல்” போன்ற வெற்றி படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

“போகன்”

படத்தின் முதல் பாதியில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்கிறார் இரண்டாம் பாதியில் அரவிந்த் சாமி கதாநாயகனாக நடிக்கிறார் எப்படி இருவரும் இதுபோல் ஒரேபடத்தில் கதாநாயகன் வில்லனாகவும், வில்லன் கதானயகனகவும் நடிக்கிறார்கள் என்பது தான் படத்தின் ரகசியம். இதில் என ஆச்சரியம் என்றால் ஒரே ஒரு கதாநாயகி மட்டும் தான் ஹன்சிகா இவர் யாருடன் ஜோடி சேருவர் என்பது தெரியவில்லை. காத்திருப்போம் படம் வெளிவரும்வரை .