
athithi sankar next movie-pratheep ranganathan
அதிதி சங்கர் அடுத்த படத்தின் ஹீரோ யார் தெரியுமா??
இயக்குனர் சங்கர் அவரின் மகளான அதிதி சங்கர் தமிழில் என்ட்ரி கொடுத்த படம் விருமன். கார்த்தியுடன் இணைந்து நடித்த முதல் படமே அதிதிக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.அந்த படத்திற்கு பிறகு அதிதி சிவகார்த்திகேயனுடன் இணைத்து மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். அதையடுத்து விஷ்ணு வர்தன் இயக்கத்தில் நடிக்க போவதாக தகவல் வெளிவந்தது.
மேலும், அதிதி அடுத்து பிரபல நடிகருடன் ஜோடி சேர்கிறார். லவ் டுடே பட ஹீரோ மற்றும் இயக்குனருமான பிரதீப் ரங்கநாதனுடன் அதிதி ஜோடி சேர்வதாக தகவல் வெளிவந்தது.
கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் படத்தில் முதலில் சிம்பு தான் ஹீரோ முடிவாகி இருந்தது. தீடிரென, சிம்புக்கு ஜோடியாக அதிதி என்று இருந்த நிலையில் தற்போது அப்படத்தில் இருந்து சிம்பு விலகியுள்ளார். அதனால், இயக்குனர் கோகுல் இப்படத்தில் நடிக்க பிரதீப் ரங்காநாதனை ஒப்பந்தம் செய்துள்ளார் என படத்தின் தரப்பில் செய்தி வெளிவந்துள்ளது.