
adtiti sankar next movie update
அதிதியின் அடுத்த அடுத்த படங்கள்… பிரபல ஹீரோவுடன் ஜோடி சேர்கிறார்….!!!
Aditi’s Next Next Films… Pairing with Popular Hero…!!!
இயக்குனர் சங்கர் அவரின் மகளான அதிதி சங்கர் தமிழில் என்ட்ரி கொடுத்த படம் விருமன். கார்த்தியுடன் இணைந்து நடித்த முதல் படமே அதிதிக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. அந்த படத்திற்கு பிறகு அதிதி சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். அதையடுத்து விஷ்ணு வர்தன் இயக்கத்தில் நடிக்க போவதாக தகவல் வெளிவந்தது. கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார் படத்தில்
லவ் டுடே ஹீரோ மற்றும் இயக்குனரான பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் ஒப்பந்தம் செய்துள்ளார்.
இந்நிலையில், அதிதி, விஷுனு விஷாலுடன் ஜோடி சேர்கிறார் . ராம் குமார் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஷ்ணு விஷால் ஜோடியாக அதிதி சங்கர் ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஏற்கனவே, ராம்குமார் -விஷ்ணுவிஷால் இணைந்து முண்டாசுப்பட்டி, ராட்சன் போன்ற வெற்றி படங்களைக் கொடுத்துள்ளனர். இவர்கள் இருவரும் மீண்டும் மூன்றாவது முறையாக இணைகின்றனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது. அதிதி வரிசையாக நிறைய படங்களைக் கைவசம் வைத்துள்ளார். முதல் படம் போலவே அனைத்து படங்களும் அதிதிக்கு வெற்றி வாய்பை தர வேண்டும்…