
adathodai leaf medicinal benifits
ஆடாதோடை மூலிகையில் இவ்வளவு நன்மைகளா…!!!
aadathoda vasica medicinal benifits:-
ஆடாதோடை மூலிகை தென்னிந்தியாவில் பல இடங்களில் காணப்படும் ஒரு வகை மூலிகை செடி. ஆடாதோடை சில இடங்களில் செடியாக அல்லது சிறு மரமாகவும் காணப்படும். ஆடு தொடாத இலை என்பதால் இவை ஆடு தொட இலை என்று அழைக்கப்பட்டது. காலப்போக்கில் இந்த பெயர் மருவி ஆடாதோடை என்றானது. இந்த மூலிகை மரத்தின் இலை, வேர் மற்றும் பட்டை என அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்தவை.
- இம்மூலிகை ஆஸ்துமா, சளி,இருமல் மற்றும் தொண்டைகட்டு இவற்றிக்கு ஒரு சிறந்த அருமருந்தாகும்.
- ஆடாதோடை இலையை பறித்து நிழலில் உலர்த்தி பொடி செய்து கொள்ளலாம். இந்த பொடியை தேனில் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால், விரைவில் சளி குணமாகும். சிறு குழந்தைகளுக்கு ஏற்பட்டிருக்கும் நாள்பட்ட நெஞ்சு சளி மற்றும் இருமல் விரைவில் குணமாகும்.
ஆடாதோடை இலையின் மருத்துவ பயன்கள்
- ஆடாதோடை இலை மற்றும் தூதுவளை இலை என இரண்டையும் சம அளவு எடுத்து காயவைத்து பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். இந்த பொடியை சிறுதளவு எடுத்து தேனுடன் கலந்து தினமும் காலை மற்றும் மாலை என இரு வேலைகளிலும் சாப்பிட்டு வந்தால் நூரையீரல் பலமாகும். நூரையீரலில் உள்ள சளி முற்றிலும் வெளியேறும். மேலும், இரத்ததை சுத்தப்படுத்தும்.
- ஆடாதோடை இலையை பறித்து காயவைத்து பொடி செய்து கொண்டு அதில் ஒரு கிராம் வீதம் எடுத்து பாலில் கலந்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து ஒரு மண்டலம் வீதம் குடித்து வந்தால் குரல் வளம் மேம்படும்.
- ஆடாதோடை வேரினால் இருமல், பித்தம் , சுவாச பிரச்னை மற்றும் சளி ரோகம் போன்ற நோய்கள் குணமாகும்.
- இம்மூலிகை கைகால் நீர்கட்டுகள், வாத வலிகள், திரேக வலிகள், வறட்டு இருமல், இளைப்பு, வயிற்று வலி மற்றும் காமாலை போன்ற பல நோய்களுக்கு அருமருந்தாகும்.
- இம்மூலிகையில் ஈய சத்து அதிகம் உள்ளது. ஆடாதோடை இலை சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து பருகி வர இரத்தக்கொதிப்பு மற்றும் மஞ்சள் காமலை போன்ற நோய்கள் விரைவில் குணமாகும்.
- காசநோய் உள்ளவர்கள் ஆடாதோடை இலையுடன் திப்பிலி, ஏலக்காய், அதிமதுரம் போன்றவற்றை சேர்த்து கஷாயம் போல காய்ச்சி 48 நாட்கள் குடித்து வந்தால் காசநோய் குணமாகும். நாள்பட்ட இருமல், சளி போன்றவை அறவே நீங்கி விடும்.