இந்தியா வந்தடைந்தார் அபிநந்தன்..மக்கள் ஆரவாரம்…!!!

wait loading cinibook video

பாகிஸ்தான் போர் வீரர்களின் பிடியில் இருந்த அபிநந்தன் இன்று மாலை நலமாக இந்திய எல்லைப் பகுதியான வாகா வந்தடைந்தார். அவரை வரவேற்க பொதுமக்களும், இந்தியா போர் வீரர்கர்களும் நீடுநேரம் காத்திருந்து ஆரவாரத்துடன் மேலத்தளத்துடன் வரவேற்றனர்.

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜம்மு-காஷ்மீரில் புல்வாமாவில் பயங்கர தாக்குதல் நடந்தது, அதில் சுமார் 40 இந்திய போர்வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதற்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானின் பாலக்கோட்டில் உள்ள தீவிரவாதிகள் பகுதியில் இந்திய போர் விமானங்கள் மூலம் இந்தியா தாக்குதல் நடத்தியது, அந்த தாக்குதலின் போது இந்திய போர் விமானம் ஒன்று அந்த பகுதியில் விழுந்து நொறுங்கியது. அதில் இருந்த இந்தியா விமானி அபிநந்தன் பாகிஸ்தான் போர் வீரர்களின் பிடியில் மாட்டிக்கொண்டார். பாகிஸ்தான் போர் வீரர்களின் பிடியில் இருந்த அபிநந்தன் ரொம்ப தைரியமாக உரையாடிய காணொளி வெளியாகி மக்கள் மத்தியில் வேகமாக பரவி வந்தன.

பாகிஸ்தான் அதிபர் அபிநந்தனை நாங்கள் மார்ச் 1 அன்று விடுவிப்போம் என்று தெரிவித்தார். அதன்படி இன்று மாலை இந்தியா எல்லை பகுதியானா வாகா வந்தடைந்தார் அபிநந்தன். அங்கு அவருக்கு மேல தளத்துடன் மக்களும் போர் வீரர்களும் வரவேற்றனர்;. பின்பு அவர் டில்லி வருவார் என்று கூறப்படுகிறது. அங்கும் பொது மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்க காத்துள்ளனர்.
அவரை மருத்துவர்கள் பரிசோதிக்க உள்ளனர். பரிசோதனைக்கு பின்பு அவர் டில்லி வருவார் என கூறப்படுகிறது.

அபிநந்தன் இந்திய திருப்பியது பொதுமக்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.