
benifits of aavaram poobenifits of aavaram poo
ஆவாரம் பூவில் இத்தனை நன்மைகளா!!???
Are there so many benefits of aavaram poo!!???
“ஆவாரம் பூ பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டா” என்று வீட்டில் பெரியவர்கள் சொல்ல கேட்டிருப்போம். அந்த பழமொழிக்கு ஏற்ப ஆவாரம் பூவில் அதிகமான மருத்துவக் குணங்கள் பொதிந்துள்ளன. ஆவாரம் செடியில் உள்ள அனைத்து பாகங்களும் நமக்கு பயன்படுகின்றன.ஆவாரம் என்னும் மூலிகை செடியானது நாம் பொதுவாக நிறைய இடங்களில் பார்க்க முடியும். வயக்காட்டு பகுதிகளில் வேலி ஓரங்களில் அதிகம் பார்க்கலாம்.
- ஆவாரம் மூலிகை, சூடு சம்பத்தப்பட்ட நோய்களுக்கும், மூல ரோகங்களுக்கும் மற்றும் கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் மிகவும் பயன்படுகிறது.
- ஆவாரம் பூவுடன் பாசிப்பயிறு கலந்து அரைத்து உடலில் பூசிக் குளித்தால் மேனி பொன்னிறமாகும்.
- மேலும், ஆவாரம் பூவை வெயிலில் உலர்த்தி காயவைத்து பின்பு பொடிசெய்து ஒரு கண்ணாடி பாட்டில் வைத்துக்கொள்ளலாம். இந்த பொடியை வெந்நீரில் கலந்து காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் தீராத மலசிக்கல் இருந்தால் விரைவில் குணமாகும்.
- மேலும், இந்த மூலிகை தேனீரை தினமும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் குடித்து வந்தால் நீரிழிவு கட்டுக்குள் இருக்கும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் ஆரவாரம் பூ மட்டும் அல்லாமல் இலையையும் சேர்த்துக்கொள்ளலாம். ஆவாரம் இலையின் சாறை பிழிந்து அதனுடன் பணகற்கண்டு சேர்த்து குடிக்கலாம்.
- மேலும், ஆராவைப் பிசின் வெகு மூத்திரத்தையும்,பிரமே ரோகத்தையும் வாதத்தையும் போக்கும். ஆரவரை செடி அனைத்து விதமான மூத்திரரோகத்தையும், ஆண்குறி எரிச்சலையும் போக்க கூடியது. ஆவாரம் செடியின் வேரிலிருந்து எடுக்கப்படும் ஒரு வகை பிசின் தான் நம் சிறுநீரக சம்பத்தப்பட்ட நோய்களுக்கு சிறந்தது. நீர் கடுப்பு இருக்கும் போது இந்த மூலிகை பிசின் சாப்பிட்டால் உடனே நீர் கடுப்பு சரியாகும்.
- அதுமட்டுமல்லாமல், ஆவாரம் பூ நம் உடலில் உள்ள கொழுப்பை எந்த ஒரு பக்கவிளைவும் அல்லாமல் குறைக்கும் வல்லமை பெற்றது.
- தலையில் பொடுகு தொந்தரவு உள்ளவர்கள் இந்த ஆவாரம் பூவின் பொடியுடன், வெந்தயம் மற்றும் கற்றாழை கலந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பொடுகு தொந்தரவு இருக்காது. ஆவாரம் செடியின் அனைத்து பாகங்களும் பல நோய்களுக்கு மருந்தாக உள்ளது.