Aan Devathai Movie Review -Samuthirakani

wait loading cinibook video

கதைக்களம்:-

குடும்பத்துடன் சென்று பார்க்கக்கூடிய திரைப்படம் ஆண் தேவதை. இப்படத்தில் சமுத்திரக்கனி -ரம்யா பாண்டியன் இவர்களுக்கு இரண்டு குழைந்தைகள். வேலைக்கு செல்லும் மனைவி ரம்யா, வீட்டில் குடும்பத்தை பார்த்துக்கொள்ளும் சமுத்திரக்கனி. அதாவது, சமுத்திரக்கனி ஒரு ஹவுஸ்ஹஸ்பண்ட்( house husband ) என்று சொல்லலாம். இவர்களின் குடும்ப வாழ்கை எப்படி செல்கிறது? என்பதை தான் இயக்குனர் தாமிரா எடுத்துக்காட்டியுள்ளார். இயக்குனரின் புதிய முயற்சியில் படம் எப்படி இருக்கு என்று பார்ப்போம்…


திரைவிமர்சனம்:-

எப்போவும் குடும்பத்தில் இருக்கும் வரைமுறையை மாற்றி இப்படத்தில் புதிதாக ஹவுஸ் ஹஸ்பண்ட் (house husband ) என்ற புதிய கான்செப்ட்( concept ) வைத்து எடுத்துள்ளார் இயக்குனர் தாமிரா. இப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் ரம்யா பாண்டியன் இருவரும் தங்களுக்கு எந்த சொந்தமும் இல்லாத நிலையில் காதல் திருமணம் செய்து கொள்கின்றனர். பிறகு இருவருக்கும் ஆதிரா மற்றும் அகரமுதல்வன் என்ற இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன. இருவரும் வேலை வேலை என்று ஓடிகொண்டேயிருக்கிறார்கள். இவர்களின் குழந்தைகளை கவனித்துக்கொள்ள யாரும் இல்லாமல் குழந்தைகள் ஏங்கின்றனர். அதனால், இளங்கோ (சமுத்திரக்கனி ) இந்நிலை தொடர்ந்தால் நம் பிள்ளைகள் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் என்று மிட்நைது மனைவி ஜெசிகாவை (ரம்யா பாண்டியன் ) வேலை விட்டுட்டு வீட்டில் பிள்ளைகளை கவனித்துக்கொள்ள வேண்டும் என்று கேக்கிறார். ஆனால், ஜெசிகா எனக்கு நிறைய கனவுகள் இருக்கிறது என்று சொல்லி மறுத்து விடவே, முடிவில் சமுத்திரக்கனி வீட்டில் இருந்து பிள்ளைகளையும் குடும்பத்தையும் கவனித்துக்கொள்ள தன வேலையை விடுகிறார். வீட்டில் ஹவுஸ் ஹஸ்பண்ட்(house husband ) ஆகா இருக்க முடிவு செய்து அதன்படி பிள்ளைகளை வளர்க்க ஆரம்பிக்கிறார். இதனால் குடும்பத்தில் நடக்கும் பிரச்னைகள் என்ன என்ன? என்று எடுத்து காட்டுகிறது மீதி கதை.

இயக்குனரின் இந்த புதிய முயற்சிக்கு பாராட்டுகள். சமுத்திரக்கனி எப்போவும் ரொம்ப கெத்தாக ஆசிரியர் அல்லது நல்ல பெற்றோர் என்ற கண்ணோட்டத்தில் பார்த்து விட்டு தற்போது அவர் இந்த படத்தில் ஒரு ஹவுஸ் ஹஸ்பண்ட்(house husband ) இருந்து பிரச்னைகளை சமாளிக்கும் விதத்தில் காட்டி உள்ளனர். அது கொஞ்சம் வருத்தம் தரக்கூடியது என்றாலும், சமுத்திரக்கனி இந்த காதாபாத்திரத்திலும் ரொம்ப அழகா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். ரம்யாவும் ஓரளவு அவருடைய காதாபாத்திரத்திற்கு ஏற்ப நடித்துள்ளார். குழந்தை ஆதிராவாகா மோனிகா அழகா நடித்துள்ளார். அதே போல, அகரமுதல்வன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மாஸ்டர் கஜாவின் ரொம்ப சிறப்பாக நடித்துள்ளனர்.

நடிப்பு என்ற அளவில் அனைவரும் நன்றாக நடித்துள்ளனர். ஆனால், இயக்குனர் புதிதாக காட்ட நினைத்த ஹவுஸ் ஹஸ்பண்ட்(house husband ) என்ற விஷயம் அந்தளவுக்கு எடுபடவில்லை. ஒளிப்பதிவு பொறுத்தவரை சுமார் தான். படத்தில் ஒரு சில இடங்களில் எதோ ஒரு நாடகம் பார்ப்பது போல தோன்ற வைத்தது எனலாம். அந்தளவுக்கு கதையில் விறுவிறுப்பு இல்லை. கதைக்களம் ஓகே தான் என்றாலும், அதை சொல்ல வந்த விதம் கொஞ்சம் சொதப்பல் என்று சொல்லாம். படத்தில் குடும்பம் என்றால் என்ன? குடும்ப உறவின் முக்கியத்துவம் என்ன? குடும்ப பொருளாதாரம் எப்படி இருக்க வேண்டும்? குடும்ப பெண் எப்படி இருக்க வேண்டும்? இப்படி நிறைய விஷயங்களை சொல்ல நினைத்த இயக்குனர். இதை எதையுமே சரியாக உணர்ச்சிப்பூர்வமாக எடுத்துக்காட்டவில்லை என்பது தான் உண்மை…………….ஒருவேளை அப்படி காட்டிருந்தால் கண்டிப்பாக இந்த படம் மக்களின் நெஞ்சில் நீங்க இடம் பெற்றிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.ஆனால் இயக்குனர் தாரா அதை தவற விட்டார்…….

மொத்தத்தில் ஆண் தேவதை படம் தலைப்புக்கு ஏற்ப ஒரு புதிய முயற்சி. குடும்பத்துடன் அனைவரும் சென்று ஒரு தடவை பார்க்கலாம் …

மதிப்பெண்:-

இந்த படத்திற்க்கு சினிபுக் 5க்கு 2.4கொடுக்கிறது.

Movie cast and crew:-

Directed by Thamira
Produced by Fakrudeen
sheik dawood
Written by Thamira
Starring Samuthirakani
Ramya Pandian
Kavin
Monica
Radharavi
Suja Varunee
Abhishek Vinod
Aranthangi Nisha
Music by Ghibran
Cinematography Vijay Milton
Edited by Kasi Viswanathan
Production
company
Sigaram Cinemas
Running time
2hr 3sec
Country India
Language Tamil

You may also like...