
aadi month special
ஆடி மாதத்தின் மகித்துவம் என்ன தெரியுமா?
Do you know what the glory of Audi month is?
ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உரிய மாதமாகக் கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் அம்மன் வழிபாடு மிக சிறப்பு. ஆடி மாதம் என்றாலே, அனைத்து அம்மன் கோவில்களிலும் கூழ் தான் காய்ச்சுவார்கள். பக்தர்களுக்கு அம்மன் பிரசாதமாக கேப்பை கூழ் கொடுப்பார்கள். ஆடி மாதம் எதற்கு அம்மா ஆதிபராசக்தியின் மாதமாகக் கருதப்படுகிறது?? தெரியுமா??
ஆடி மாத வரலாறு:-
ஆடி மாதம் ஏன் அம்மன் உரிய மாதமாகக் கருதப்படுகிறது காரணம் தெரியுமா??
புராண கதைகளில், ஆடி என்பது ஒரு தேவமங்கையின் பெயர் என குறிப்பிட்டுள்ளனர். ஒரு சமயம், பார்வதி தேவி அவர்கள் சிவனை பிரிந்து தனியாக ஒரு இடத்தில் தவம் செய்து வந்துள்ளனர். அந்த நேரம் பார்த்து ஆடி என்னும் தேவக்குல பெண் ஒருத்தி சிவபெருமான் தனிமையில் இருப்பதை பயன்படுத்தி அந்த பெண் சிவபெருமான் அருகில் பார்வதி உருவம் எடுத்து நின்றார். சிவபெருமானுக்கு, வந்திருப்பது பார்வதி தேவி இல்லை என்பதை உணர்ந்தார். சிவபெருமான் அவர்கள் கோபமுற்று ஆடி பெண்ணை தன்னுடைய சூலாயுதத்தால் அழிக்க முற்பட்டார். சிவபெருமானின் சூலாயுத்திலிருந்து வெளிப்பட்ட தீப்பொறி ஆடியின் மீது பட்டதில் ஆடி புனிதம் அடைந்தாள். ஆடி சிவபெருமானிடம் தான், உங்களின் பார்வை என் மீது பட வேண்டும் என்பதற்காக தான் இவ்வாறு செய்து விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் என்று சிவபெருமானிடம் ஆடி மன்னிப்புக் கேட்டாளாம்.
அவள் மன்னிப்பு கேட்டதால், சிவபெருமானும் நீ தமிழ் மாதங்களில் ஒரு மாதமாகக்கருதப்படுவாள். அம்மாதம் பார்வதியின் மாதம் என தெரிவித்தார். மேலும், நீ பூலோகத்தில் கசப்பு தன்மை கொண்ட வேப்ப மரமாக பிறப்பாய். நீ பல நோய்களுக்கு மருந்தாக இருப்பாய் என்றும், அம்மனுக்குரிய முக்கிய அங்கம் என்றும் சிவபெருமான் ஆடிக்கு விமோசனம் கொடுத்தார். இவ்வாறு ஆடி மாத பிறப்பை பற்றி புராண கதைகளில் கூறுகிறது.
ஆடி மாத சிறப்பு:-
“ஆடி பட்டம் தேடி விதை” என்ற பழமொழிக்கேற்ப ஆடி மாதம் தான் விவசாயிகளுக்கு ஏற்ற மாதமாகக்கருதப்படுகிறது. மாதங்களில் இரு வகை உள்ளது. உத்ராணாயணம் மற்றும் தஷ்யாணனம் என இரண்டு வகை உள்ளது. ஆடி முதல் மார்கழி தஷ்யாணனம் காலம். தை முதல் ஆணி உத்ராணாயணம் காலம். தஷ்யாணன காலத்தில் சூரியனிடமிருந்து சூட்சும கதிர் வெளியேறுமாம். அதனால் தான், தஷ்யாணன கால தொடக்கத்தில் அதாவது, ஆடி மாதத்தில் விதை விதைக்க உகந்த காலம் என்று முன்னூர்கள் கூறியுள்ளனர்.
ஆடி மாதம் என்றாலே அனைத்து அம்மன் கோவில்களிலும் கூழ் தான் காய்ச்சுவார்கள். பக்தர்களுக்கு அம்மன் பிரசாதமாக கேப்பை கூழ் கொடுப்பார்கள். அது எதற்காக தெரியுமா?? ஆடி மாதத்தில் காற்று அதிகமாக வீசும். அந்த காலத்தில் நோய் தொற்று வர வாய்ப்பு உள்ளது. அதனால் தான், அம்மன் கோவில்களில் கூழில் வேப்பிலை போட்டு காய்ச்சி பிரசாதமாக கொடுக்கின்றனர். பக்தர்கள் அந்த கூழை குடிப்பதால் அவர்களுக்கு எந்த நோய் தொற்றும் அண்டாது.
ஆடி மாதம் முழுவதும் சிறப்பு மிகுந்த நாட்கள் அதிகம் உள்ளன. ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி மிக சிறப்பு. ஆடி பூரம், ஆடி 18 ,ஆடி கிருத்திகை, ஆடி பௌர்ணமி மற்றும் நாக பஞ்சமி என அனைத்தும் சிறந்த வழிப்பாட்டுக்குரிய நாளாக கருதப்படுகிறது.