
aadi perukku spicial
ஆடி பெருக்கு என்றால் என்ன?ஆடி பெருக்கின் முக்கியத்துவம் என்ன??
what is aadi perukku?? what is the important of aadi perukku festival??
ஆடி மாதம் என்றாலே, அனைத்து கிராமப்புறங்களிலும் ரொம்ப விசேஷமாக இருக்கும். அனைத்து அம்மன் கோவில்களும் திருவிழா மாதிரி ரொம்ப சிறப்பாக தெய்வ வழிப்பாடு நடைப்பெறும். ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி அம்மாவாசை, ஆடி பூரம், ஆடி பௌர்ணமி , ஆடி பெருக்கு மற்றும் ஆடி தபசு என ஆடி மாதம் முழுவதுமே தெய்வ வழிப்பாட்டுக்குரிய மாதமாக இருக்கும். ஆடி மாதத்தில், ஆடி பெருக்கு என்பது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
ஆடி பெருக்கு என்றால் என்ன?
ஆடி பெருக்கு என்பது ஆடி மாதத்தின் 18 -ஆவது நாளை தான் குறிக்கிறது. ஆடி பெருக்கு என்பது இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் நாளாக தமிழக மக்களால் கொண்டாடப்படுகிறது. முந்தைய காலங்களில் வாழ்ந்த மக்கள் அனைவருக்கும் மூலதனம் விவசாயம் தான். விவாசாயத்தை நம்பி தான் அனைத்து கும்பங்களும் இருந்தனர். அந்நிலையில் விவசாயம் செழிக்க வேண்டும் என்றால், நீர் வளம் சிறந்து விளங்க வேண்டும். சித்திரை, வைகாசி, ஆணி முடிந்து ஆடி பிறந்ததும் வெயில் குறைந்து பருவமழை தொடங்க ஆரம்பிக்கும். ஆடி மாதத்தில் மழை பெய்து நீர் நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். எனவே,நமக்கு வாழ்வாதாரமான இருக்கும் நீர்க்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக நம் முன்னோர்கள் ஆடி 18 நாளை கொண்டாடினார்கள். ஆடி 18 அல்லது ஆடி பெருக்கு என்பது நீர் நிலைகளைக் கொண்டாடும் விதமாவும், நீர்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாகக் கொண்டப்படுகிது.
ஆடி பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கு ஏற்ப ஆடி மாதத்தில் நாம் விவசாய நிலத்தில் விதை விதைத்தால், அது நல்ல அமோகமான விளைச்சலை தருமாம். ஏன் என்றால், அந்த மாதத்தில் பெய்யும் பருவ மழை மற்றும் அந்த மாதத்தில் சூரியனிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சு ரொம்ப சக்தி வாய்ந்ததாக இருக்குமாம். மற்ற மாதங்களை விட ஆடி மாதத்தில் சூரியனின் கதிர்வீச்சு ரொம்ப சக்தி வாய்ந்ததாக இருக்கும். அதற்கு காரணம், சூரியன் பூசம் நட்சத்திரத்திலிருந்து புதன் ஆதிக்கம் செலுத்தும் ஆயிலியம் நட்சத்திரத்திற்கு ஆடி ௧௮ அன்று தான் மாறுகிறார். அதனால் தான், சூரியனின் கதிர்வீச்சு அதிக சக்தி வாய்ந்ததாக உள்ளது. சக்தி மிகுந்த கதிர்கள் சூரியனிலிருந்து வெளிவருவதால், அந்நாளில் நாம் விவசாய நிலத்தில் விதை விதைத்தால் ரொம்ப சிறப்பான விளைச்சல் இருக்கும் என்று நம் முன்னூர்கள் சொல்லி சென்றுள்ளனர்.
ஆடி பெருக்கு வழிப்பாடு மற்றும் சிறப்புகள்:
ஆடி பெருக்கு அன்று கோவில்களிலும், நீர் நிலைகளிலும் சிறப்பான வழிப்பாடு நடைப்பெறும். ஆடி 18 அன்று ஆற்றங்கரைகளுக்கு சென்று நீர் நன்றி தெரிவிக்கும் வகையில் படையல் போட்டு கலவை சாதம் படைத்து விளக்கேற்றி வழிபடுவர். காவேரி நதிக்கரையில், ஆடி 18 அன்று புதுமண பெண்கள் தாலி பெருக்கி கொள்வார்கள். கல்யாணம் ஆகாத பெண்கள் வேண்டிக்கொண்டு மஞ்சள் கயிறு, கருகமணி மற்றும் காதோலை இவற்றை வாங்கி சுமங்கலிகளுக்கு கொடுத்தால் விரைவில் நல்ல மணமகன் அமைந்து திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். இவ்வாறு ஆடி பெருக்கு நாளில், நம் தொடங்கம் அனைத்து காரியங்களும் நல்ல வெற்றி பெரும் என்பது ஐதீகம்.
இந்த வருடம்(2023 ) ஆடி 18 வருகின்ற ஆகஸ்ட் 3 ஆம் தேதி வருகிறது. ஆடி பெருக்கு நாளில் முக்கியத்துவம் உணர்ந்து நாம் அந்நாளில் வழிபடுவோம். வாழ்வில் வளம் பெறுவோம். நீரின் முக்கியத்துவம் உணர்ந்து நன்றியை தெரிவிப்போம்…