96 Movie Review – Vijay Sethupathi – Trisha – MR 21

wait loading cinibook video

கதைக்களம்

காதலை மையமாக வைத்து இந்த படம் நகர்கிறது. 96ம் ஆண்டில் பத்தாம் வகுப்பு முடித்த ஒரு வகுப்பினர் அனைவரும் reunionல் ஒன்று சேர்க்கிறார்கள். அப்போது அந்த காலகட்டத்தில் நடந்த காதல் கதைகளை மிகவும் நேர்த்தியாக எடுத்து சொல்கிறதுதான் இந்த படத்தின் கரு. விஜய் சேதுபதி இந்த படத்தில் போட்டோகிராபராக வலம் வருகிறார். அதே போல் படத்தின் நாயகி திரிஷா விஜய் சேதுபதிக்கு ஜோடியாக வருகிறார். இந்த இருவர்களது காதல் எப்படி மலர்ந்தது, ஏன் பிரிந்தது என்பதை இறுதிவரை ஒரு சுவாரஷ்யமான படமாக்கப்பட்டுள்ளது.

திரைவிமர்சனம்

பழைய நினைவுகளை நினைத்து பார்ப்பதென்றாலே ஒரு சுகம் தான் அதுவும் பள்ளிப்பருவத்திலோ கல்லூரி, பருவத்திலோ நடந்தவற்றை நினைவுபடுத்தி பார்ப்பதென்றால் அது ஒரு ரம்மியமான சுகம் தான். அதனை அப்படியே படமாக்கிய இயக்குனர் பிரேம் குமார் அவர்களுக்கு முதலில் எங்களது மனமார்ந்த பாராட்டுக்கள்.

96ல் காதல் செய்த நபர்களுக்கு இந்த படம் ஒரு சிறந்த நியாபகர்த்தமாக அமைத்திருக்கும் என்றே சொல்லலாம். இந்த காலகட்டத்தில் இருக்கும் காதலர்களுக்கு இது புரிவதில் கொஞ்சம் சிரமம் ஏற்படுகிறது.

இசையை பற்றி கூறவேண்டும் என்றால் பாடல்கள் அனைத்தும் மனதை கொள்ளைகொள்ளும் வகையில் அமைத்துள்ளது. குறிப்பாக “காதலே காதலே” பாடல் அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது.

விஜய் சேதுபதி மற்றும் திரிஷா இருவரும் நடிப்பில் பின்னி பெடலெடுத்துள்ளனர் மற்றும் தேவதர்ஷினி, ஆடுகளம் முருகதாஸ் ஆகியோர்கள் நடிப்பு தேவையான அளவு உள்ளது. இரண்டாம் பகுதி மட்டும் மெதுவாக நகர்கிறது அதை கொஞ்சம் குறைத்திருந்தால் இன்னும் நன்றாக அமைந்திருக்கும்.

முக்கியமாக இந்த படம் காதலர்களுக்கு ஒரு வரப்பிரசாதம், மற்றவர்களுக்கு சாதாரண படம் போலத்தான்.

மதிப்பெண்

இந்த படத்திற்கு சினிபுக் 5க்கு 2.9கொடுக்கிறது.

Movie cast and crew

Directed by C. Prem Kumar
Produced by Nandagopal
Written by C. Prem Kumar
Starring
  • Vijay Sethupathi
  • Trisha Krishnan
Music by Govind Menon
Cinematography Mahendiran Jeyaraju,
N. Shanmuga Sundaram
Edited by R. Govindaraj
Production
company
Madras Enterprises
Release date
4th October, 2018
Country India
Language Tamil

Leave a comment

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *