
7g rainbow colony movie part2 update
மீண்டும் 7 G ரெயின்போ காலனி -பாகம் 2 செல்வராகவன் அறிவிப்பு….!!!
செல்வராகவனின் 7 G ரெயின்போ காலனி படம் கடந்த -ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வெற்றிப்பெற்றது. இப்படத்தில் ரவி கிருஷ்ணா ஜோடியாக சோனியா அகர்வால் நடித்திருந்தார். யுவன்சங்கர் ராஜா இப்படத்திற்கு இசைமைத்திருந்தார். இப்படத்தின் அனைத்தும் பாடல்களும் சூப்பர் ஹிட்டானது. செல்வராகவன் இறுதியாக இயக்கிய படம் “நானே வருவேன்”. இப்படம் மக்கள் மத்தியில் சுமாரான வரவேற்பைப்பெற்றது எனலாம். இப்படத்திற்கு பிறகு செல்வராகவன் சாணி காகிதம் மற்றும் பாகசூரன் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

தற்போது, செல்வராகவன் 7 G ரெயின்போ காலனி படத்தின் இரண்டாவது பாகத்தை மீண்டும் இயக்கப் போவதாக கூறியுள்ளார். இப்படத்தின் ஹீரோ ரவி கிருஷ்ணா அவர்களிடம் நடிக்க கேட்டுள்ளதாக தெரிகிறது. இப்படத்தின் ஷூட்டிங் வரும் ஜூலை மாதத்திலிருந்து தொடங்கப்போவதாக தெரிவித்துள்ளார் இயக்குனர் செல்வராகவன்.கிட்டத்தட்ட 19 வருடங்களுக்கு பிறகு இப்படத்தை செல்வராகவன் இயக்கபோகிறார் என்பதுக் குறிப்பிடத்தக்கது….