
thiruvillaku-nanmaigal-poojai
விளக்கு ஏற்றுவதில் இத்தனை நன்மைகளா? எத்தனை முகம்- அதற்கேற்ற பலன்கள்???
விளக்கு எரியாத வீடு விளங்காது என்பார்கள் நம் முன்னோர்கள். அதற்கேற்ப விளக்கு என்பது நம் வாழ்வில் உள்ள துன்பம் என்னும் இருளை நீக்கி நம் வாழ்வில் இன்பம் என்னும் வெளிச்சத்தைத் தருவது. அதனால் நாம் எல்லாரும் தினந்தோறும் விளக்கு ஏற்றுவது என்பது மிகவும் நல்லது. விளக்கு ஏற்றுவது என்பது எல்லா மதத்தினரும் கடைப்பிடிப்பது தான். சரி , பலருக்கும் விளக்கு ஏற்றுவதில் பல சந்தேகங்கள் இருக்கும். அதாவது விளக்கில் எத்தனை முகம் ஏற்றலாம். , எந்த திசையில் ஏற்றக்கூடாது , எந்த எண்ணெய் பயன்படுத்தலாம் என பல சந்தேகங்கள் உள்ளது பலருக்கும். வாங்க பார்க்கலாம்……
விளக்கு ஏற்றுவதில் உள்ள விதிமுறைகள்:-
- ஒரு முகம் ஏற்றினால் சாந்தமான மன நிலைமை கிடைக்கும். மத்திம பலன் கிடைக்கும்.
- இரு முகம் ஏற்றினால் குடும்ப ஒற்றுமை ஓங்கும்.
- மூன்று முகங்கள் ஏற்றினால் புத்திர பாக்கியம் கிட்டும். வாழ்வில் வெற்றி கிட்டும்.
- நான்கு முகங்கள் ஏற்றினால் சொத்து சுகம் சேரும். ஆரோக்கியம் மேம்படும்.
- ஐந்து முகங்கள் ஏற்றினால் , சகல செல்வங்களும் சேரும். என்பது ஐதீகம்.
எனவே அதிக முகங்கள் ஏற்றினால் அதிக பலன் கிடைக்கும். நாம் இனி முடிந்தளவு மூன்று அல்லது ஐந்து முகங்கள் ஏற்றினால் நல்லது. நாம் அதிகாலையில் 4 to 6 பிரம்ம முகூத்தரித்தில் விளக்கு ஏற்றி வழிபட்டால் , நம்முடைய வேண்டுதல் விரைவில் நிறைவேறும் என்பது ஐதீகம். விளக்கு ஏற்றும் போது, நாம் அனைவரும் அவர்களுடைய குலதெய்வத்தை நினைத்து விளக்கு ஏற்றுவது மிகவும் சிறப்பு. முதல் கடவுளான பிள்ளையார் நினைத்து கொண்டு, பின்பு குலதெய்வத்தை நினைத்து விளக்கு ஏற்றலாம். தெற்கு திசையை தவிர, மற்ற அனைத்து திசைகளிலும் விளக்கு ஏற்றலாம்.
எந்த திரி போட்டு விளக்கு ஏற்றினால் என்ன பலன்கள்:-
- நாம் பொதுவாக பஞ்சுத்திரி கொண்டு விளக்கு ஏற்றுவோம். பஞ்சுத்திரி மங்களம் உண்டாகும்.
- சிவப்புத்திரி போட்டு விளக்கு ஏற்றினால் திருமண தடை நீங்கும். குடும்பத்தில் உள்ள பிரச்சைனைகள் விலகி ஒற்றுமை உருவாகும். கடன் விலகும் என்பது ஐதீகம்.
- தாமரை தண்டு திரியில் விளக்கு ஏற்றினால் வீட்டில் மஹாலக்ஷ்மியின் அருள் கிடைக்கும். நெய் விளக்கு ஏற்றினால் மிகவும் நல்லது. கடலை எண்ணெயை தவிர மற்ற எண்ணெய் எதுவும் பயன்படுத்தலாம்.
கோவிலில் விளக்கு ஏற்றி வழிப்பட்டால் , மிக மிக சிறந்தது. திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நாம் பார்த்து வழிப்பட்டால் நம்முடைய 21 தலைமுறைகளுக்கு முக்திக் கிடைக்கும் என்பது ஐதீகம். நாம் எந்த ஒரு விசேஷம் என்றாலும் குத்துவிளக்கு ஏற்றுவது வழக்கம். குத்துவிளக்கின் ஐந்து முகங்களும் ஒரு பெண்மைக்குரிய அறிவு, அன்பு , உறுதி , நிதானம் மற்றும் பொறுமை இவற்றை குறிப்பதாக உள்ளது. மேலும் , கோவில்களில் நடக்கும் விளக்கு புஜையில் பெண்கள் கலந்துக்கொள்வது குடும்பத்தினர்க்கு மிகவும் நல்லது. திருமணம் முடிந்த பெண்கள் என்றால் , கணவருக்கு நல்லது இந்த விளக்கு பூஜை. கன்னி பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்துக்கொண்டால் விரைவில் கல்யாணம் நடைபெறும். வி ளக்கு ஏற்றுவதில் உள்ள நன்மைகளை தெரிந்துக் கொண்டு விளக்கு ஏற்றுவோம் வாழ்வில் துன்பமின்றி வாழ்வோம் …