நிலானி தற்கொலை முயற்சி !!!!! குழப்பத்தில் போலீஸ்…..

பிரபல சீரியல் நடிகையானா நிலானி அவரின் காதலர் காந்தி லிலித்குமார் இரண்டு நாட்களுக்கு முன்பு தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்ட நிலையில் தற்போது நிலானி இன்று தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார் என்று செய்தி வெளிவந்துள்ளது.

 

சீரியல் நடிகை நிலானிக்கும் உதவி இயக்குனர் காந்தி லிலித்குமார் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இடையில் ஏதோ பிரச்னையால் நிலானி காந்தி விட்டு விலக நினைத்துள்ளார். ஆனால், காந்தி விடவில்லை. நிலானி மயிலாப்பூரில் எதோ சீரியல் படப்பிடிப்பில் இருந்த போது காந்தி அங்கு சென்று நிலானிடம் நாம் இருவரும் திருமணம் செய்துக்கொள்ளலாம் என்று கேட்டுஉள்ளார. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்னை பெரிதாகி இறுதியில் நிலானி போலீஸ் புகார் செய்துள்ளார். போலீஸ் விசாரணை செய்து வருகின்ற வேளையில், கடந்த 17 ஆம் தேதி சென்னை கே .கே நகர் சாலையில் காந்தி லிலித்குமார் திடிரென்று பெட்ரோல் உடம்பில் ஊத்தி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமணையில் உடனே அனுமதித்தும் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். காந்தி லிலித்குமார் காதலால் அந்நியமாக இப்படி உயிரை மாய்துள்ளார் என்பது தான் வேதனைக்குரிய விஷயம்.

போலீஸ் தரப்பில் விசாரணை நடைபெற்று வருகிறது. நடிகை நிலானியும், காந்தி லிலித்குமார் கூட பழகியது. பின்னர், ஒரு கட்டத்தில் அவர் நல்லவர் இல்லை என்று தெரிந்து விலகியது என தன தரப்பு வாதத்தையும் போலீஸிடம் தெரிவித்துள்ளார். தற்போது காந்தி சகோதரர் தீடிரென்று நடிகை நிலானி நடத்தை சரியில்லை. அவர் இன்னும் பலர் பேர் கூட தொடர்பில் உள்ளதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அவர் யார் யாருடன் தொடர்பில் உள்ளார், நிலானி சம்பத்தப்பட்ட புகைப்படம் என அனைத்தையும் நாளை மறுநாள் வெளியிடுவேன் என்று கூறியுள்ளாராம். இதற்கிடையே நடிகை நிலானி இன்று கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார் என்பது அனைவரும் அதிர்ச்சி அடைய வைக்கிறது.

அவர் உண்மையில் எந்த தப்பு பண்ணவில்லை என்றால் எதற்காக தற்கொலை செய்துக்கொள்ள முடிவு செய்ய வேண்டும்??????? போலீஸ் சரியான முறையில் விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிச்சத்துக்கு வரும்

You may also like...