
jawan -movie update
ஜவான் பட ட்ரைலர் சாதனை- இப்படத்திற்க்காக அட்லீ வாங்கிய சம்பளம் வாங்க தெரிந்துக்கொள்ளலாம்..!
Jawaan film achievement- let’s know how to get the salary that Atlee took for the film..!
ஜவான் படத்தின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. வெளியான 24 மணி நேரத்தில் பல மில்லியன் பார்வையாளர்களை பெற்றது.
பாலிவுட் நடிகர் ஷாருகான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் பல கோடி செலவில் உருவான படம் தான் ஜவான். இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன் மற்றும் ப்ரியாமணி என பல நட்சத்திரகங்கள் நடித்துள்ளார். அட்லீ இயக்கத்தில் பெரும் பொருள்செலவில் உருவான இப்படத்தின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன்பு ஹிந்தியில் மட்டும் அல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஹிந்தியில் மட்டும் 45 மில்லியனுக்கு மேல் பார்வையாளர்களை பெற்றது. ஒட்டுமொத்தமாக 112 மில்லியன் பார்வையாளகர்ளை கடந்து சாதனை படைத்துள்ளது. படத்தின் ட்ரைலர் பார்த்து அனைவரும் பாராட்டி வருகின்றனர். ட்ரைலர் பார்க்கும் போது பயங்கரமான ஆக்ஷன் படமாக தெரிகிறது. தெறிக்க விடும் அளவு உள்ளது படத்தின் ட்ரைலர்.
இப்படத்தின் இயக்குனர் அட்லீ இப்படத்திற்க்காக ரொம்ப கஷ்டப்பட்டுள்ளார் என தெரியவருகிறது. ஷாருகான் நடிப்பு தெறிக்க விடும் அளவு இருக்கும் என எதிர்பார்க்கலாம். இயக்குனர் அட்லீ இப்படத்தை இயக்குவதற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா???
அட்லீ இப்படத்திற்கு வாங்கிய சம்பளம் 45 கோடியாக இருக்கலாம் என்று தகவல் வெளிவந்துள்ளது. இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றால், இயக்குனர் அட்லீ சம்பளம் இன்னும் உயர வாய்ப்பு உள்ளது.