
suriya 42 kanguvaa movie update
சூர்யா 42- படம் கங்குவா-படைத்தலைப்பிற்கு அர்த்தம் தெரியுமா??
Surya 42- Movie Ganguwa- Do you know the meaning of the title??
வாடிவாசல் படத்திற்கு பிறகு சூர்யா நடிக்கும் படம் கங்குவா. சூர்யாவின் ௪௨ ஆவது படத்தை இயக்குனர் சிவா இயக்கவுள்ளார். கங்குவா என பெயரிடப்பட்டுள்ளது . ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கவுள்ளார். இப்படத்தில் சூர்யா ஜோடியாக ஹிந்தி நடிகை திசா பதானி நடிக்கிறார். இப்படத்தின் தலைப்பே ரொம்ப வித்தியாசமாக உள்ளது. கங்குவா என்றால் நெருப்பை போன்றவர் என்பது பொருள் என விளக்கம் அளித்துள்ளார் இயக்குனர் சிவா.
இப்படம் சுமார் 1500 வருடங்களுக்கு முன்பு உள்ள காலகட்டத்தில் நடக்கும் ஒரு கற்பனை கதைக்களம் ஆகும். இயக்குனர் சிவா அவரின் மனதில் தோன்றிய ஒரு கற்பனை கதை தான் இப்படம். இப்படத்தின் மோஷன் போஸ்டர் இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது எனலாம். மோஷன் போஸ்டரில் இடம் பெற்றுள்ள நாய்,முகமூடி, கழுகு மற்றும் குதிரை ஆகியவை இப்படத்தின் முக்கிய காதாபாத்திரம் ஆகும். இப்படத்தின் அதிகமாக சி.ஜி காட்சிகள் இடம் பெரும். அதுமட்டுமல்லாமல் இயக்குனர் சிவா அவர்கள் இப்படத்தை 3 D வடிவில் உருவாக்கவுள்ளார். விரைவில் படத்தின் டீஸர் வெளியாகும் என ஏதிர்பார்க்கலாம்.