விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் படத்தின் டைட்டில் வெளியீடு..!!
விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் படத்தின் டைட்டில் வெளியீடு..!!
விஷால் மற்றும் ஆர்யா இருவரும் பிரபல இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடித்து வருகின்றனர். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் வேளையில் தற்போது அப்படத்தின் டைட்டில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
இப்படத்தில் விஷால் ஜோடியாக மிருணாளினி நடிக்கிறார். ஆர்யா ஜோடியாக சமீரா ரெட்டி நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹதராபாத்தில் உள்ள ராமோராஜிராவ் பிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டது. இப்படத்திற்கு இசை தமன் அவர்கள். ஆர்யா மற்றும் விஷால் இணைந்து அவன் இவன் படத்தில் சிறப்பாக நடித்தனர்.
அப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது எனலாம். தற்போது, மீண்டும் இணைத்து நடிக்கின்றனர். விஷால் மற்றும் ஆர்யா தங்களுடைய சமூக தளங்களில் தற்போது நடித்து வரும் இப்படத்தின் டைட்டில் வெளியிட்டனர். “எனிமி” என்ற பெயரிடப்பட்ட இப்படத்தின் பட்டப்படிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
உ ண்மையில் விஷால் மற்றும் ஆர்யா இருவரும் உயிர் நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அவர்கள் எதிரிகளாக நடிக்கின்றனர். ஆர்யா மற்றும் விஷால் இருவரும் இப்படம் தங்களுக்கு ஒரு திருப்பு முனையாக அமையும் என தெரிவித்துள்ளனர்.