புதிய கெட்டப்பில் விஜய்சேதுபதி….கடைசி விவசாயி படத்தில்…!!!
விஜய்சேதுபதி கடைசி விவசாயி படத்தில் முருக பக்தராக நடித்துள்ளாராம். இதுவரை இல்லாதா கெட்டப்பில் நடித்துள்ளாராம்.
காக்காமுட்டை , குற்றமே தண்டனை மற்றும் ஆண்டவன் கட்டளை போன்ற நல்ல படங்களை இயக்கிய மணிகண்டன் தற்போது கடைசி விவசாயி படத்தை இயக்கியுள்ளார் . இப்படத்தில் 70 வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் தான் கதாநாயகன். யோகிபாபு மற்றும் விஜய்சேதுபதி முக்கிய காதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
விஜய்சேதுபதி முருகபக்தராக நடித்துள்ளார். இப்படம் முழுவதும் தயாராகி விட்ட நிலையில் இப்படத்தை வெளியிடுவதில் சிக்கலாக இருந்தது. கொரோனா காரணமாக வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போதும் அதே நிலை தொடர்வதால் இப்படத்தை இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மணிகண்டன் ஓ.டி.டி யில் வெளியிடதிட்டமிட்டுள்ளார் .